பெண்களின் சீற்றமே சீறு .. கைத்தட்டலை பெற்ற காட்சி வெளியானது !
Recommended Video
சென்னை : சீறு படத்தில் இருந்து ஒரு முக்கியமான காட்சியை ஸீனீக் பீக்காக படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் ஜீவா நடிப்பில் பிப்ரவரி 7 வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்திருக்கும் படம் தான் சீறு. இந்த படத்தில் ஜீவா, ரியா சுமன், சதீஷ், நவ்தீப், வருண் ,சாந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தை தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் தயாரித்து இருக்கிறார். படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருக்கிறார் .

படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படக்குழு படத்தில் இருந்து ஒரு காட்சியை ஸீனீக் பீக்காக வெளியிட்டிருக்கிறது. இது படத்தின் மிக முக்கியமான காட்சியாகும் .
வில்லனால் கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் தோழிகள் கோவத்துடன் பேசும் காட்சி அது. அதில், ஒரு பையனுக்கு பிரச்சினைனா மாமா,மச்சானு பத்து பேரு வராங்கல, பெண்ணுங்க மட்டும் வீட்டுல உக்காந்து அடுப்பு ஊதனுமா நம்மலும் திருப்பி செய்யனும் என்று தோழியின் மரணத்திற்கு நீதி கேட்டு கிளம்பும் காட்சி அது .

திரையரங்குகளில் இந்த, காட்சி அதிக படியான கைத்தட்டலை பெற்ற காட்சிகளில் இதுவும் ஒன்று. இந்த காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டன. மேலும், படம் முழுக்க இது போன்ற பெண்களின் எழுச்சியை பற்றிய காட்சிகளை வைத்திருப்பார் இயக்குனர் ரத்னசிவா .
இந்த காட்சியில் சீறும் பெண் கதாபாத்திரத்தில் வளர்ந்து வரும் நடிகை சரண்யா ரவி நடித்திருந்தார். இவர் தற்போது குறும்படங்கள் , இணையத்தொடர்கள் மற்றும் படங்கள் என பலவற்றில் நடித்து வருகிறார். இவர் தவறிப்பிறந்த விந்துகள் போன்ற குறும்படத்திலும், ஆட்டோ சங்கர் இணையத்தொடரிலும் சமீபத்தில் சைக்கோ படத்தில் ஒரு காட்சியிலும் நடித்திருப்பார். தொடர்ந்து கவனிக்கவைக்கும் வகையில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல சமூகம் சார்ந்த விசயங்களை பேசியிருக்கிறது சீறு படம். சண்டை காட்சிகள் நிறைந்த படமாக வந்திருப்பதாக மக்கள் பாராட்டி வருகின்றனர். ஐசரிகணேஷ் தொடர்ந்து தயாரித்து வரும் படங்கள் அனைத்தும் நல்ல கதையுடன் கமர்ஷியல் வெற்றியையும் பதிவு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











