சீதா ராமம் 5 நாட்களில் 33 கோடி வசூல்: சக்சஸ் மீட்டில் ஸ்டைலாக என்ட்ரி கொடுத்த துல்கர், மிருணாள்

ஐதராபாத்: துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர் வெளியான 'சீதா ராமம்' படம் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

Recommended Video

Sita Ramam Movie Review | Yessa ? Bussa ?| Sita Ramam |Dulquer Salmaan|*Review

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இந்தப் படத்தை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார்.

கடந்த வாரம் 5ம் தேதி வெளியான 'சீதா ராமம்' திரைப்படம் வசூலிலும் கலக்கி வருகிறது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த சீதா ராமம்

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த சீதா ராமம்

ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர் நடித்துள்ள 'சீதா ராமம்', கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட போதே, ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்புகள் காணப்பட்டன. இது காதல் கதையா அல்லது ஆக்சன் ஜானர் திரைப்படமா என தெரியாமல் இருந்தனர். இந்நிலையில், தற்போது சீதா ராமம் எதிர்பார்த்ததை விட தரமான ஹிட் லிஸ்ட்டில் இணைந்துள்ளது.

காதல் காவியம் என ரசிகர்கள் உருக்கம்

காதல் காவியம் என ரசிகர்கள் உருக்கம்

துல்கர் சல்மான் ராணுவ வீரராக நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். இவருக்கு இளவரசி கேரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ராஷ்மிகா மந்தனா பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண்ணாக நடித்துள்ளார். 1964 முதல் 1984 வரையிலான காலக்கட்டத்தில் நடக்கும் இந்தப் படத்தின் கதை, துல்கருக்கும் மிருணாள் தாகூருக்கும் இடையேயான காதல் காவியமாக உருவாகியுள்ளது.

சீதா ராமம் 5 நாட்களில் 33 கோடி

சீதா ராமம் 5 நாட்களில் 33 கோடி

'சீதா ராமம்' திரைப்படம் வெளியான முதல் 3 தினங்களில் மட்டும் 23 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வந்தன. தற்போது 5 தினங்களில் 33 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட அனைத்து மொழி ரசிகர்களும், சீதா ராமம் படத்தை கொண்டாடி வருகின்றனர். இதனால், சீதா ராமம் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.

அசத்தலாக நடந்த சக்சஸ் மீட்

அசத்தலாக நடந்த சக்சஸ் மீட்

இதனைத் தொடர்ந்து, 'சீதா ராமம்' படத்தின் சக்சஸ் மீட் ஐதராபாத்தில் அசத்தலாக நடந்துள்ளது. இதில், இயக்குநர் ஹனு ராகவபுடி, ஹீரோ துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். துல்கர் சல்மான் கறுப்பு நிற பேண்ட், சட்டையில் செம்ம ஸ்டைலிஷாக என்ட்ரி கொடுத்தார். அதேபோல், நாயகி மிருணா தாகூர் 'சீதா ராமம்' படத்தின் இளவரசி கேரக்டரைப் போல, பூப் போட்ட அழகிய லெஹங்காவுடன் விழாவில் பங்கேற்றார். அவர்களது ஸ்டைலிஷ் லுக், ரசிகர்களை பரவசப்படுத்தியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X