ஜவ்வாக இழுத்ததால் சீதக்காதிக்கு கத்தரி போட்ட படக்குழு: 15 நிமிடங்கள் குறைப்பு #SeethakaathiTrimmed
சென்னை: விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தின் காட்சி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்த சீதக்காதி படம் கடந்த 20ம் தேதி வெளியானது. இது விஜய் சேதுபதியின் 25வது படம் ஆகும்.

படத்தில் விஜய் சேதுபதி வெறும் 40 நிமிடங்கள் தான் வருகிறார். இதை அவரே தெரிவித்து தான் மக்களை தியேட்டர்களுக்கு அழைத்தார். தியேட்டர்களுக்கு சென்று படம் பார்த்தவர்கள் பொறுமையை இழந்துவிட்டனர். காரணம் படம் 2 மணிநேரம் 53 நிமிடங்கள் நீளமாக இருந்தது தான்.
படத்தின் நீளத்தை குறைத்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். சில காட்சிகளை நீக்குமாறு விஜய் சேதுபதியும் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் நீளம் 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் சீதக்காதி 2 மணிநேரம் 38 நிமிடங்கள் மட்டுமே ஓடும். ட்ரிம் செய்யப்பட்ட புதிய சீதக்காதி நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்பப்படுகிறது.
படத்திற்கு பெரிய மைனஸாக இருந்ததே நீளம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











