ஒரு பக்கம் விஷால், ஒரு பக்கம் தமிழ் ராக்கர்ஸ்: பாவம் விஜய் 'சீதக்காதி' சேதுபதி

By Siva

Recommended Video

சீதக்காதியை ஓரங்கட்ட கைதானாரா விஷால்?- வீடியோ

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று ரிலீஸான சீதக்காதி படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் ஆட்களை பிடித்து சிறையில் தள்ளிவிட்டு தான் மறுவேலை என்று மார்தட்டிய தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷாலால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸில் விஷாலுக்கு பங்கு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று தயாரிப்பாளர் ஏ. எல். அழகப்பன் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த சீதக்காதி படத்தை தமிழ் ராக்கர்ஸ் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்த தமிழ் ராக்கர்ஸ் அட்டூழியம் தாங்க முடியவில்லை.

கைது

கைது

சீதக்காதி ரிலீஸான அன்று விஷால் கைதானதால் அனைவரின் கவனமும் அவர் மீது சென்றுவிட்டது. இதனால் சமூக வலைதளங்களில் சீதக்காதியை விஷால் ஓவர்டேக் செய்தார். இந்நிலையில் படம் ஆன்லைனில் கசிந்துள்ளது.

தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ்

பூட்டை உடைக்க போன இடத்தில் கைதானதை எதிர்த்து விஷால் நீதிமன்றம் சென்றுள்ளார். நீங்கள் போராடுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் தமிழ் ராக்கர்ஸை முதலில் அடக்குங்கள். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அடுத்த தேர்தலும் வரப் போகிறது இன்னும் தமிழ் ராக்கர்ஸை பிடிக்க முடியவில்லை.

உண்மை

உண்மை

தமிழ் ராக்கர்ஸ் ஆட்களை பிடித்து சிறையில் தள்ளுவேன் என்று கூறியதை முதலில் செய்யுங்கள் விஷால். அவர்களை பிடித்து ஜெயிலில் போட்டுவிட்டு எனக்கு அவர்களின் இணையதளத்தில் பங்கு இல்லை என்று நிரூபித்துக் காட்டுங்கள். உங்களால் முடியும் விஷால், கமான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X