ரஜினிக்கும் விஜய்க்கும் நடுவில் விஜய் சேதுபதி... நவம்பர் மாதம் முழுக்க திருவிழாதான்!
சீதக்காதி திரைப்படம் நவம்பர் 16ஆம் தேதி ரிலீஸாக உள்ளது
Recommended Video

சென்னை: விஜய் சேதுபதி நடித்திருக்கும் சீதக்காதி திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் சர்கார் மற்றும் ரஜினிகாந்தின் 2.0 ஆகிய படங்களுக்கு அடுத்தபடியாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் சீதக்காதி.
நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் திரைப்படத்திற்க்குப் பிறகு இயக்குனர் பாலாஜி தரணிதரன் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார். மேலும், இது விஜய் சேதுபதியின் 25வது படமாகும்.

புல்லட் ரயில் வேகத்தில் அதிவேகமாக படங்களை நடித்துத் தள்ளும் விஜய் சேதுபதி இம்முறை, விஜய்க்கும் ரஜினிக்கும் நடுவில் வரவுள்ளார். தீபாவளிக்கு சர்காரும், நவம்பர் 29ஆம் தேதி 2.0 படமும் ரிலீஸாக உள்ள நிலையில், இரண்டுக்கும் நடுவே, நவம்பர் 16ஆம் தேதி சீதக்காதி ரிலீஸாக உள்ளது. அதனால், நவம்பர் மாதம் முழுவதுமே திரையரங்கங்கள் அதிரும் மாதமாக இருக்கப்போகிறது.
சீதக்காதி திரைப்படத்தில் விஜய் சேதுபதி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். எண்பது வயது நாடகக் கலைஞர் அய்யாவாகவும், அவருடைய மகன் குமாராகவும் விஜய் சேதுபதி நடித்துள்ளார். வயதான விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வீடு திரைப்பட புகழ் அர்ச்சனாவும், மகன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, பார்வதியும் ரம்யா நம்பீசனும் நடித்துள்ளனர். காயத்ரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். "பெரிய நடிகர்களை நடிக்க வைக்க முயற்சித்த பாலாஜி தரணிதரன், வேறு வழியில்லாமல் என்னை நடிக்க வைத்தார். கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் ஆத்மார்த்தமான சீதக்காதி படத்தில் நடித்ததை பாக்கியமாக கருதுகிறேன்" என விஜய் சேதுபதி சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











