அய்யா எங்க, சினிமாவை விட்டு காலி பண்ணிடுவேன்: நிதானமாக அடிக்கும் சீதக்காதி
Recommended Video

சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில் பலரும் கேட்கும் கேள்வி அய்யா எங்க, அய்யா எங்க என்பது தான்.
அய்யா படப்பிடிப்புக்கு வராமல் இருப்பதால் சினிமா தயாரிப்பாளர்கள் கோபம் அடைவது போன்று காட்டியுள்ளனர். அதில் ஒருவர் அய்யாவை சினிமாவில் இருந்து காலி பண்ணிவிடுவேன் என்று மிரட்டுகிறார்.
அமைதி
ஆளாளுக்கு கொந்தளிக்க அய்யாவோ, குட்டிப் பிள்ளையுடன் ஜாலியாக விளையாடுகிறார். 'ஆடி ஓய்ந்திருக்கும் கிழவன் நான். நானே சரித்திரமாக மாறிவிட்டேன்.' என்று அய்யா(விஜய் சேதுபதி) கூறுவதுடன் ட்ரெய்லர் முடிகிறது. தலைமுடி எல்லாம் நரைத்த கிழவனாக நடித்திருந்தாலும் அந்த கதாபாத்திரத்தில் ஒரு கெத்து தெரிகிறது. விஜய் சேதுபதியின் தெனாவட்டான கதாபாத்திரம் சிலரை நினைவூட்டுகிறது. படம் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
வெயிட்டிங்
சீதக்காதி ட்ரெய்லரில் விஜய் சேதுபதியை அல்ல மாறாக அய்யாவை தான் பார்க்க முடிகிறது. ட்ரெய்லரில் விஜய் சேதுபதியை காணவில்லை அய்யா தான் தெரிகிறார்.
வாழ்த்து
விஜய் சேதுபதியின் 25வது படம் சீதக்காதி என்பது குறிப்பிடத்தக்கது. படம் அடுத்த மாதம் 20ம் தேதி வெளியாக உள்ளது.
வேற லெவல்
ட்ரெய்லர் வேற லெவல், படத்திற்காக காத்திருக்கிறோம். நிச்சயம் ஹிட்டு தான் என்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











