சேகர் கம்முலா இயக்கத்தில் மீண்டும் இணைகிறதா ரவுடி பேபி ஜோடி!?
சென்னை: தனுஷ் நடிப்பில் நேற்று Netflix ல் ஜகமே தந்திரம் வெளியானது. படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தனுஷ் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தாலும் மற்ற ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
எது எப்படி ஆயினும் தனுஷின் பட வரிசை ஒரு புறம் நீண்டு கொண்டே தான் போகிறது. தனுஷின் மார்கெட்டும் உயருகிறது.

படப்பிடிப்பு பணிகள்
கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு பணிகள் தடை செய்யப்பட்டுள்ளன. The Gray Man படப்பிடிப்புக்கு வெளிநாடு சென்றுள்ள தனுஷ் கூடிய விரைவில் நாடு திரும்புவார் என தெரிகிறது. நாடு திரும்பிய உடன் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.

நீளும் வரிசை
அதுமட்டுமின்றி தனுஷ் நடித்து கொடுக்க அவரது லைன் அப்பில் ஏகப்பட்ட படங்கள் உள்ளன. Atrangi Re ரிலீசுக்கு தயாராக உள்ளது. இது போக ராம்குமார் இயக்கும் படம், மாரி செல்வராஜ் இயக்கும் படம், வெற்றிமாறன் இயக்கும் படம் என தனுஷின் லைன் அப் வலுவாக உள்ளது.

மூன்று மொழிகளில்
இந்நிலையில் மற்றுமொறு புது படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். தேசிய விருது வென்ற இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என நேற்று அறிவிப்பு வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது.

ரவுடி பேபி
இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே சேகர் கம்முலா இயக்கத்தில் சாய் பல்லவி Fidaa, Love Story படங்களில் நடித்துள்ளார். மேலும் தனுஷுடன் மாரி - 2 படத்தில் நடித்திருக்கிறார் சாய் பல்லவி.


Click it and Unblock the Notifications











