செல்ஃபி பற்றி சிவகுமாரை கலாய்த்த கஸ்தூரி: லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய கார்த்தி

By Siva

Recommended Video

Sivakumar Selfie: சிவகுமாருடன் செல்ஃபி எடுத்த வாலிபர்- வீடியோ

சென்னை: ஜூலை காற்றில் பட விழாவில் சிவகுமாரை கலாய்த்த கஸ்தூரியால் கார்த்தி கோபம் அடைந்தார்.

கே.சி. சுந்தரம் இயக்கத்தில் ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஜூலை காற்றில். ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார், கார்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

 செல்ஃபி

செல்ஃபி

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கஸ்தூரி கார்த்தியை அழைத்து உங்க அப்பா இல்லை, அதனால் அவசரமாக ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் என்றார். கார்த்தி சிரித்தபடி இது ரொம்ப தேவையில்லாதது என்று செல்ஃபிக்கு போஸ் கொடுக்காமல் மைக் அருகே சென்றுவிட்டார்.

 கார்த்தி

கார்த்தி

ஒரு மரியாதையே இல்லாமல் போய்விட்டதுல்ல இந்த செல்ஃபி என்கிற விஷயத்திற்கு. யாருக்கும் மரியாதையே கிடையாது. கேட்டு போட்டோ எடுக்கணும் என்பது இல்லை. மூஞ்சிக்கு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துவது. அந்த பிளாஷ் வேற பின்னாடி ஒன்று, முன்னாடி ஒன்று. அவ்வளவு பிளாஷ் கண்ணில் பட்டால் மைக்ரேன் இருக்கிறவன் என்னாவான். ஒரு விவஸ்தையே கிடையாது என்று நினைக்கிறேன். மரியாதையாக கேட்டுவிட்டு போட்டோ எடுக்க வேண்டும் என்று தெரியாத அளவுக்கு நாம் ஆகிவிட்டோம் என்று வருத்தமாக உள்ளது என்றார் கார்த்தி.

கிண்டல்

ஜூலை காற்றில் நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தை வைத்து கஸ்தூரியை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

செல்போன்

செல்போன்

அனுமதி கேட்காமல் செல்ஃபி எடுத்த இரண்டு பேரின் செல்போன்களை தட்டிவிட்டார் சிவகுமார். அதே சமயம் அனுமதி கேட்டவர்களுக்கு செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X