ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த ஜி.வி.பிரகாஷ்... வைரலாகும் புகைப்படம்!
சென்னை : கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள படம் செல்ஃபி. படத்தில் ஜிவி பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Recommended Video

செல்ஃபி படம்
நடிகரும் பிரபல இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் பேச்சுலர் மற்றும் ஜெயில் படங்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றன. இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் செல்ஃபி படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.

மதிமாறன் இயக்கம்
இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷுடன் வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ மேனன், வாகை சந்திரசேகர், சுப்ரமணிய சிவா, டிஜி குணாநிதி மற்றம் தொழிலதிபர் சாம்பால் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குநகரா பணிபுரிந்த மதிமாறன் இயக்கியுள்ளார்.

முக்கிய கேரக்டரில் கௌதம் மேனன்
படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமாரே இசையமைத்துள்ளார். மேலும் கலைப்புலி எஸ் தாணு படத்தை தயாரித்துள்ளார். இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன் தற்போது சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கிவருகிறார். இந்நிலையில் செல்ஃபி படத்தில் அவர் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

சிறப்பான விமர்சனங்கள்
படம் தற்போது வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக படத்தில் கவுதம் வாசுதேவ மேனனின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் நடிகர் ஜிவி பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, இயக்குநர் மதிமாறன், நடிகர் டிஜி குணாநிதி மற்றும் தயாரிப்பாளர் டி சபரீஷ் ஆகியோர் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்துள்ளனர்.

ரசிகர்களுடன் செல்ஃபி
மேலும் படத்தின் இடைவேளையின்போது ரசிகர்கள் ஜிவி பிரகாஷ்குமார் மற்றும் படக்குழுவினருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்துள்ளனர். இதைதொடர்ந்து ஜிவி பிரகாஷ் ரசிகர்களுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

கல்லூரி மாணவராக ஜிவி பிரகாஷ்
படத்தில் கல்லூரி மாணவராக ஜிவி பிரகாஷ் நடித்துள்ளார். மாணவர்கள் எவ்வாறு தரகர்களாக மாற்றப்படுகிறார்கள் என்பதை கதைக்களமாக இந்தப் படத்தில் மதிமாறன் எடுத்துக் கொண்டுள்ளார். படத்தில் இதற்கு எதிராக ஜிவி பிரகாஷின் செயல்பாடுகள் சொல்லப்பட்டுள்ளன. வித்தியாசமான கதைக்களத்தை படம் சொல்வதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











