twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'செல்லாக்காசு' - வெற்றிபெற்ற குறும்படங்களுக்கு விருது வழங்கும் விழா!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    சூர்யா - மூவி பஃப் நடத்தும் மாபெரும் குறும்பட போட்டி..

    சென்னை : கடந்த 2016 நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 500,1000 ரூபாய் செல்லாது என அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்பால் ஒரே இரவில் மக்கள் கையிலிருந்த பணம் அனைத்தும் செல்லாக்காசாக மாறிப்போனது. இந்த நாட்களில் மக்கள் எதிர்கொண்ட சூழல்களையும், அனுபவங்களையும், குறும்படங்களாக எடுக்கும் போட்டி கடந்த வருடம் அறிவிக்கப்பட்டது.

    கடந்த செப்டம்பர் 2017-ல் "இளந்தமிழகம் திரை" சார்பாக அறிவிக்கப்பட்ட 'செல்லாக்காசு' குறும்படப் போட்டியில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த படைப்பாளிகளின் 40-க்கும் அதிகமான குறும்படங்கள் கலந்து கொண்டன.

    Sellaakaasu award function on Feb 24

    திரைப்பட இயக்குநர்கள் திரு. ராம், திரு. கமலக்கண்ணன், திரு. மீரா கதிரவன், திரு. 'நிழல்' திருநாவுக்கரசு அவர்கள் அடங்கிய நடுவர் குழுவின் தேர்வுகளின் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ள குறும்படங்களுக்கு விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி 24-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

    சிறந்த படம் என்கிற பிரிவில் மூன்று விருதுகளும், சிறந்த நடிகர் நடிகை, சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட பல பிரிவுகளிலும் படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.

    இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற குறும்படங்களை எடுத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா பிப்ரவரி 24-ம் தேதி நடைபெற இருக்கிறது. சென்னை கிறித்துவக் கல்லூரியின் இதழியல் துறை மற்றும் இளந்தமிழகம் இயக்கம் இணைந்து இந்த விருது வழங்கும் விழாவை நடத்துகின்றன.

    English summary
    More than 40 short films were contested in 'Sellaakaasu' short film competition organized by Ilantamizhagam. The award ceremony will be held on February 24 in Chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X