மாலை நேரத்து மயக்கம்... தலைப்பை மட்டும் தான் மனைவிக்கு விட்டுக் கொடுத்துள்ளாராம் செல்வராகவன்!

சென்னை: மாலை நேரத்து மயக்கம் என்ற தன் படத்தின் தலைப்பை மட்டும் தான் தனது மனைவிக்கு விட்டுக் கொடுத்துள்ளாராம் இயக்குநர் செல்வராகவன்.

பிரபல இயக்குநரான செல்வராகவன் தனது தம்பியும் பிரபல நடிகருமான தனுஷை வைத்து மாலை நேரத்து மயக்கம் என்ற பெயரில் படம் இயக்குவதாக முன்னர் அறிவித்திருந்தார். ஆனால், வருடக்கணக்கில் எடுக்கப்பட்ட இரண்டாம் உலகம் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதன் எதிரொலியாக தனது பட வேலைகளை சற்று ஒத்தி வைத்தார் செல்வராகவன். தனுஷும் தனது மற்ற பட வேலைகளில் பிசியானார்.

இந்நிலையில், சமீபத்தில் செல்வராகவனின் மனைவியான கீதாஞ்சலி தான் படம் இயக்கப் போவதாக சமூக வலைதளப் பக்கத்தில் தகவல் வெளியிட்டார். அப்படத்தின் தலைப்பு மாலை நேரத்து இயக்கம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

குழந்தைகளுடன் செல்வா...

குழந்தைகளுடன் செல்வா...

மேலும், செல்வராகவன் சிலகாலம் தனது குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட விரும்புவதால் தான் படத்தை இயக்கும் வேலையில் இறங்கியதாகவும் கீதாஞ்சலி குறிப்பிட்டிருந்தார்.

அது வேற.. இது வேற...

அது வேற.. இது வேற...

எனவே, செல்வராகவன் இயக்கத் திட்டமிட்டிருந்த மாலை நேரத்து மயக்கம் படத்தைத் தான் கீதாஞ்சலி இயக்கப் போகிறார் என்ற தகவல் பரவியது. ஆனால், தலைப்பு மட்டும் அது, கதை அவருடையது என விளக்கமளித்துள்ளார் செல்வராகவன்.

தலைப்பு மட்டும் தான்...

தலைப்பு மட்டும் தான்...

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ‘தலைப்பை மட்டும்தான் என் மனைவிக்கு விட்டுக் கொடுத்திருக்கிறேன். மற்றபடி எனது படத்துக்கும், அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.

மனைவிக்கு பிடித்திருந்தது...

மனைவிக்கு பிடித்திருந்தது...

மேலும், தலைப்பு பிடித்திருந்ததாக மனைவி கூறியதால் விட்டுக் கொடுத்திருக்கிறாராம் செல்வராகவன். மற்றபடி அப்படத்திற்கும், தன்னுடையதற்கும் வேறு தொடர்பு ஏதும் இல்லை என அதில் அவர் உறுதி படத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X