தனுஷின் வருகைக்காக காத்திருக்கும் செல்வராகவன்.. விரைவில் தொடங்குகிறது 'நானே வருவேன்'!

சென்னை: தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். தனது சகோதரரான தனுஷை வைத்து துள்ளுவதோ என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

தொடர்நது காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

மீண்டும் தனுஷுடன்

மீண்டும் தனுஷுடன்

கடைசியாக அவரது இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியானது. அடுத்ததாக இயக்குநர் செல்வராகன் பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனுஷை இயக்கவுள்ளார்.

தனுஷின் ஜீப்பும்

தனுஷின் ஜீப்பும்

நானே வருவேன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் தனுஷ் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவரது ஜீப்பும் இந்தப் படத்தில் முக்கிய பாத்திரத்தை பெறுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார்.

ஊர் திரும்பியதும்..

ஊர் திரும்பியதும்..

நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட் படமான தி கிரேமேன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. தனுஷ் ஊர் திரும்பிய உடனே நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

ஷூட்டிங் தயார்..

ஷூட்டிங் தயார்..


மேலும் நானே வருவேன் படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த அளவிலான பிரி புரடெக்ஷன் பணிகளை செய்ததில்லை. ஷுட்டிங்குக்கு தயாராகிறேன் என பதிவிட்டுள்ளார்.

ஸ்டைலிஷ் லுக்கில்

ஸ்டைலிஷ் லுக்கில்

தனுஷின் நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் நடிகர் தனுஷ் கையில் சிகரெட்டுடன் ஸ்டைலிஷ் லுக்கில் இருந்தார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X