செல்வராகவன்- யுவன்- தனுஷ்- அரவிந்த்... ஒரு வெற்றிக் கூட்டணி மீண்டும் கைகோர்க்கிறது!
ஒரு வெற்றிக் கூட்டணி மீண்டும் கைகோர்த்துள்ளது. அது செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா, தனுஷ் மற்றும் அரவிந்த் கிருஷ்ணா.
இந்த மூவரும் இணைந்த காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்கள் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்தப் படங்களில் யுவனின் இசையும் அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் தனித்துவம் மிக்கதாக இருந்தன.

ஒயிட் எலிபேன்ட்
மூவரும் இணைந்து, ஒயிட் எலிபேன்ட் என்ற பட நிறுவனத்தை தொடங்கினர். இதில் செல்வராகவனின் முன்னாள் மனைவி சோனியா அகர்வாலும் ஒரு பார்ட்னராக இருந்தார்.

முறிவு
ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தின்போது இந்தக் கூட்டணி உடைந்தது. யுவனுக்கு பதில் ஜிவி பிரகாஷையும், அரவிந்துக்குப் பதில் ராம்ஜியையும் சேர்த்துக் கொண்டார் செல்வராகவன்.

ஓடவில்லை
அந்தப் படமும் பெரிதாகப் போகவில்லை. அதன் பிறகு செல்வராகவன் இயக்கிய எந்தப் படமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை.

மீண்டும்
இப்போது மீண்டும் தனது பழைய நண்பர்களுடன் கை கோர்த்துள்ளார் செல்வராகவன்.
செல்வராகவன், யுவன் மற்றும் அரவிந்த் கிருஷ்ணா அடுத்த படத்தில் இணைவதாக செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி அறிவித்துள்ளார்.

தனுஷ்
அடுத்த நாளே, அந்தப் படத்தை தனது வுண்டர்பார் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் என தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். படத்துக்கு ஹீரோ தனுஷா என்பது தெரியவில்லை.
இந்த மூன்று திறமையாளர்கள் மீண்டும் இணைந்தது அவர்களின் ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











