Don't Miss!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.. மகாபாரத புத்தகத்துடன் வெளியான 'பகாசூரன்' டைட்டில் லுக்!
சென்னை: திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய இயக்குநர் ஜி மோகன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படம் பகாசூரன்.
இந்த படத்தில் செல்வராகவன் மற்றும் நட்டி நட்ராஜ் லீடு ரோலில் நடிக்க உள்ளனர்.
இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பகாசூரன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
காலாவில்
ராமாயணம்..
கர்ணனில்
மகாபாரதம்..
பா.
ரஞ்சித்
பாணியில்
மாரி
செல்வராஜ்..
சொல்ல
வருவது
என்ன?

திரெளபதி
மதம் மற்றும் சாதிய அடிப்படையிலான படங்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உங்க பங்குக்கு நீங்க ஒரு படம் எடுக்குறீங்களா? எங்க பங்குக்கு நாங்க ஒரு படம் எடுக்குறோம்னு திரைத்துறையில் திடீர் போட்டியே உருவாகி உள்ளது. அப்படி இயக்குநர் ஜி மோகன் இயக்கத்தில் நாடக காதலை அம்பலப்படுத்தும் விதமாக உருவான படம் தான் திரெளபதி.

கடும் எதிர்ப்பு
ஆரம்பத்தில் அந்த படத்திற்கு எதிராக மூடர்கூடம் நவீன் உள்ளிட்ட சில இயக்குநர்கள் நேரடியாக ஜி மோகன் உடன் சண்டைக்கே சென்றனர். ஆனால், மற்றொரு பிரிவினர் ஆதரவு அளிக்க பல தடைகளை தாண்டி திரையில் வெளியானது திரெளபதி. நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்திருந்த நிலையில், குடும்பத்துடன் ஷாலினியும் தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து தனது ஆதரவை அளித்தார்.

கெளதம் மேனன் நடிப்பில்
அடுத்ததாக மோகன் ஜி இயக்கத்தில் மீண்டும் ஹீரோவாக ரிச்சர்ட் ரிஷி நடிக்க அவருக்கு வில்லனாக கெளதம் மேனன் நடித்த ருத்ர தாண்டவம் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஏகப்பட்ட சிக்கலான விஷயத்தை இந்த படத்திலும் கையாண்டு இருந்தார் இயக்குநர்.

பகாசூரன் டைட்டில் லுக்
இந்நிலையில், இயக்குநர் ஜி மோகன் இயக்கப் போகும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் லுக் வெளியாகி உள்ளது. செல்வராகவன் மற்றும் நட்டி நடராஜ் இணைந்து மிரட்டப் போகும் இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளார் ஜி மோகன். டைட்டில் லுக்கிலேயே ஏகப்பட்ட விஷயங்களை அடுக்கி வைத்திருக்கிறார். மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.

மகாபாரதம்
மகாபாரதத்தில் வரும் திரெளபதியை குறிக்கும் விதமாக முதல் படத்தை இயக்கிய இயக்குநர் ஜி மோகன், மூன்றாவது படத்தின் டைட்டில் லுக்கில் மகாபாரத புத்தகத்தையே வைத்துள்ளார். மேலும், மகாபாரதத்தில் பீமனுக்கும் பகாசூரன் என்பவருக்கும் சண்டை நடக்கும் அந்த குறீயிட்டை வைத்துத் தான் பகாசூரன் என டைட்டிலே வைத்துள்ளார்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
மேலும், இந்த டைட்டில் லுக் போஸ்டரில் "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்கிற வில்லங்கமான வாசகத்தையும் போட்டு யாரையோ வம்பிழுப்பதை போலவே தெரிகிறதே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மாரி செல்வராஜின் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தில் வில்லனாக நடித்த நட்டி நட்ராஜ் இந்த படத்தில் என்ன கதாபாத்திரத்தில் மிரட்ட போகிறார் என்பதை காணவும் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.