என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா, ஆனால்..: செல்வராகவன்
Recommended Video

சென்னை: என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்பதை சோகமாக சொல்லியுள்ளார் இயக்குனர் செல்வராகவன்.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பெற்றோர்கள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியூர்களுக்கு சென்று வருகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியும் பிள்ளைகளுடன் ஊருக்கு கிளம்பியுள்ளார்.
இது குறித்து செல்வராகவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
செல்வராகவன்
பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்பதை நாங்கள் ரெக்கார்ட் செய்தோம். ஆனால் நிஜத்தில் அவர் நான் இல்லாமல் வெளியூர் செல்வது கவலையாக உள்ளது என்று ரொம்பவே ஃபீல் பண்ணியுள்ளார் செல்வா.
நல்ல ஜோடி
செல்வராகவனின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் அவரின் என்.ஜி.கே. படம் குறித்த அப்டேட் கேட்டுள்ளனர். சிலரோ சூப்பர் ஜோடி, மனைவியை பிரிந்திருக்க இப்படி வருத்தப்படுகிறாரே என்று தெரிவித்துள்ளனர்.
கருத்து
ஊருக்கு போன மனைவி சீக்கிரம் வந்துட்டா அதுக்குள்ள வந்துட்டாளேன்னு தோன்றும் என ஒருவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
படம்
நெஞ்சம் மறப்பதில்லை படம் குறித்து பல ரசிகர்கள் செல்வராகவனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











