செல்வராகவன் - கீதாஞ்சலிக்கு பெண் குழந்தை!

துள்ளுவதோ இளமை தொடங்கி, மயக்கம் என்ன வரை பல வெற்றிப் படங்களைத் தந்தவர் செல்வராகவன். நடிகை சோனியா அகர்வாலை முதலில் திருமணம் செய்தார். பின்னர் அவருடன் விவாகரத்து நடந்துவிட்டது. கடந்த ஜூலை மாதம் தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த கீதாஞ்சலியை திருமணம் செய்தார்.
இதுகுறித்து செல்வராகவன் கூறுகையில், "இன்று மிகுந்த மகிழ்ச்சியாக உணர்கிறேன். எங்களுக்கு மகள் பிறந்துள்ளாள். தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளனர். என்னை பெயர் வைப்பதென்றெல்லாம் இன்னும் முடிவு செய்யவில்லை," என்றார்.
பிரசவத்துக்காக மனைவி கீதாஞ்சலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், தனது இரண்டாம் உலகம் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மருத்துவமனையிலேயே இருந்தார் செல்வராகவன்.
குழந்தை பிறந்த சந்தோஷத்தை இனிப்பு கொடுத்து கொண்டாடினார் செல்வராகவன்.
Comments


Click it and Unblock the Notifications