twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செல்வராகவனை கடனில்லா உலகத்தில் வாழ வைக்குமா இரண்டாம் உலகம்?

    By Shankar
    |

    இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத பேன்டசி உலகை கதைக் களமாக வைத்து செல்வராகவன் எடுத்துள்ள இரண்டாம் உலகம் இன்னும் ஓரிரு தினங்களில் திரையைத் தொடுகிறது.

    ஹாலிவுட்டுக்கு சவால் விடும் வகையில் இந்தியத் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட படம் இது என அதில் பணியாற்றிய அத்தனை பேரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

    கடனாளி நம்பர் 1

    கடனாளி நம்பர் 1

    இவர் பாலிவுட் பெரும்புள்ளி. ராஜ்குமார் சந்தோஷி. தமிழ் சினிமாக்காரர்களை விட தமிழ் நன்கு தெரிந்த பாலிவுட் இயக்குநர் - தயாரிப்பாளர். செல்வராகவன் படத்தின் கதை ஒன்று பிடித்துப் போக அதன் உரிமைக்காக ரூ 20 லட்சம் கொடுத்தாராம் செல்வாவுக்கு. இவர் கதையையும் கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பித்தரவில்லை. சந்தோஷி கோபதோஷியாக வட்டியும் முதலுமாக அரைகோடிக்கு மேல் (ரூ 64 லட்சம் எனகிறார்கள்) நோட்டீல் அனுப்பிவிட்டார். லேபுக்கு கடிதமும் கொடுத்துவிட்டார்!

    கடனாளி நம்பர் 2

    கடனாளி நம்பர் 2

    இவரும் ஒரு ஜாம்பவான்தான், தெலுங்கில். சுரேஷ் புரொடக்ஷன்ஸ் டி ராமாநாயுடு. தனிக்காட்டு ராஜா போன்ற சில தமிழ்ப் படங்களையும் தயாரித்த பெரிய நிறுவனம். இந்த நிறுவனத்துக்காக படம் செய்து தருவதாகக் கூறி ரூ 3.5 கோடியை அட்வான்ஸாகப் பெற்றிருக்கிறார் செல்வராகவன். படமும் பண்ணவில்லை... பணமும் தரவில்லை. அந்தக் கடன் ரூ 6 கோடியாக வளர்ந்து நிற்கிறது. இதை வசூலித்துத் தரவேண்டும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவரிடம் டி ராமாநாயுடுவே நேரடியாக முறையிட்டிருக்கிறார். எனவே அதிலிருந்தும் தப்புவது சாதாரண விஷயமல்ல!

    கடனாளி நம்பர் 3

    கடனாளி நம்பர் 3

    இவர் நம்ம ஊர் பிரபலம். முன்பு பெரும் பரபரப்புடன் படங்கள் செய்து, பின் நொடித்துப் போன லட்சுமி மூவி மேக்கர்ஸ் முரளிதரன். இவரும் தன் நிறுவனத்துக்காக படம் செய்து தரச் சொல்லி செல்வராகவனுக்கு அட்வான்ஸ் கொடுத்தவர்தான். அதுவும் சில கோடிகளை நெருங்கி விட்டிருக்கிறது. அதையும் இரண்டாம் உலகம் வெளியாகும் நேரத்திலேயே வசூலித்துத் தரவேண்டும் என நெருக்க ஆரம்பித்துள்ளார் முரளிதரன்.

    இவர் அதிரடி கடனாளி...

    இவர் அதிரடி கடனாளி...

    இந்த மூன்று பெரும் கடனாளிகள் போதாதென்று, புதிதாக களத்தில் குதித்துள்ளார் ஒரு கடனாளி. இவரை செல்வராகவனே கூட எதிர்ப்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. அது, இரண்டாம் உலகத்தைத் தயாரித்த பிரசாத் வி பொட்லூரி!

    ரூ 47 கோடி...

    ரூ 47 கோடி...

    "இரண்டாம் உலகம்' படத்திற்காக 47 கோடி ரூபாய் செலவு வைத்துவிட்டார். இதனால் செல்வராகவனிடமிருந்து ஏதேனும் ஒரு தொகை வசூலித்துத் தரவேண்டும்" என புகார் தந்திருக்கிறார் பிவிபி. இதுதான் செல்வராகவனை ஜெர்க் ஆக வைத்துவிட்டதாம்.

    சமாளிக்க முடியாமல் புலம்பல்

    சமாளிக்க முடியாமல் புலம்பல்

    இந்த நெருக்கடி ஏதோ இன்று திடீரென்று முளைத்ததில்லை செல்வராகவனுக்கு. அவர் சில மாதங்களுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில், என்னை யாராவது தத்தெடுத்துக்கிட்டு, என் கடன்களை அடைத்துவிட்டால் போதும். நிம்மதியாக சினிமா எடுப்பேன். இப்போதுள்ள மனநிலையில் அடுத்த படம் எடுப்பேனா என்றே தெரியவில்லை என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

    இந்த நெருக்கடியிலிருந்து மீள, கடனாளிகள் அனைவரையும் இன்னும் ஒரு ஆறு மாதம் அமைதியா இருங்க... எல்லாத்தையும் அடைச்சிடறேன் என்று 'ஜவாப்பு' சொல்லிக் கொண்டிருக்கிறாராம் செல்வா...

    இது சினிமா உலகமாச்சே... வாய்ப்பு கிடைத்தபோதே பீறாய்ஞ்சாதானே உண்டு என்ற மனநிலையில், அவரது ஜவாப்பை ஏற்க மறுக்கிறார்களாம் கடனாளிகள்!!

    English summary
    Director Selvaragavan is struggling to come out from a big financial crisis due to failed his commitments with big shots of the industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X