குட்டி மகனுடன் கொஞ்சி விளையாடும் செல்வராகவன்.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
சென்னை : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு முன்னணி இயக்குனராக இருப்பவர் இயக்குனர் செல்வராகவன்.
நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த நெஞ்சம் மறப்பதில்லை ஒருவழியாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று ஹிட் அடித்துள்ளது.
இதுவரை இயக்குனராக இருந்து இப்பொழுது நடிகராக சாணிக் காகிதம் மூலம் அறிமுகமாகும் செல்வராகவன் லாக் டவுனில் தனது குட்டி மகனுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2
வழக்கமான கமர்சியல் திரைப் படங்களை இயக்காமல் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு இயல்பான கதைகளை இயக்கி ரசிகர்களை இன்று வரை தன் வசம் வைத்திருக்கும் இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். குறிப்பாக தனுஷுடன் இணைந்து பணியாற்றும் திரைப்படங்கள் தனிச்சிறப்பு பெற்று இருக்க இவர்களது கூட்டணியில் உருவாக உள்ள புதுப்பேட்டை பாகம் இரண்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டுள்ளனர். இதற்கிடையில் தனுஷுடன் மீண்டும் கூட்டணி அமைத்து நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 இயக்கி வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சாணிக் காகிதம்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு வித்திட்ட ஆயிரத்தில் ஒருவன் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் முதற்கட்ட பணிகள் நடந்து வர இந்த படத்திலும் தனுஷ் நடிக்கிறார் . இதுவரை இயக்குனராக அனைவராலும் அறியப்பட்ட செல்வராகவன் முதல்முறையாக நடிகராகவும் சாணிக் காகிதம் படம் மூலம் களமிறங்குகிறார். இதில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

மூன்றாவதாக ஆண் குழந்தை
இவ்வாறு பல திரைப்படங்களில் இயக்கம் மற்றும் நடிப்பு என படு பிஸியாக இருக்கும் செல்வராகவன் இப்பொழுது லாக்டவுன் சமயம் என்பதால் வீட்டில் செல்ல குழந்தைகளுடன் பொழுதை கழித்து வருகிறார். செல்வராகவனுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ரிஷிகேஷ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Recommended Video

கொஞ்சி விளையாடும்
ரிஷிகேஷ் கடைக்குட்டி என்பதால் செல்வராகவன் அவர் மீது மிகவும் அன்பு கொண்டுள்ளார். தற்போது லாக்டவுன் என்பதால் இன்னும் வசதியாக முழு நேரத்தையும் அவருடன் செலவழித்து வருகிறார். கடைக்குட்டி ரிஷிகேஷ் மற்றும் பெரிய மகன் ஓம்கார் இவருடன் செல்லமாக கொஞ்சி கொஞ்சி விளையாடும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











