செல்வராகவன் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. நெஞ்சம் மறப்பதில்லை படமும் ரிலீசாகுது!

சென்னை: கெளதம் மேனனின் எனை நோக்கிப் பாயும் தோட்டா மற்றும் குயின் ரிலீசாகிடுச்சு. அடுத்து செல்வராகவன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ரசிகர்கள் இரண்டு வருஷமா வெயிட் செய்து வரும் நெஞ்சம் மறப்பதில்லை படமும் விரைவில் வெளியாகிறது என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து செல்வராகவன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ரசிகர்கள் பயங்கர குஷியில் இருக்கின்றனர்.

Selvaragavan’s Nenjam Marappathillai also getting release soon

எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தை போலவே கடந்த 2 ஆண்டுகளாக இந்த படமும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடந்தது.

ஐசரி கணேஷ் கருணையால் கெளதம் மேனனின் கடன் பிரச்சனைகள் தீர்ந்துள்ள நிலையில், அடுத்த அடுத்த அதிரடிக்கு கெளதம் மேனன் தயார் ஆகி வருகிறார்.

இன்று கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாகியுள்ள குயின் வெப் சீரிஸ் பலரது பாராட்டுக்களை பெற்று எம்.எக்ஸ் பிளேயர் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

கெளதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது என்ற செய்தியை அறிந்த எஸ்.ஜே.சூர்யா சந்தோஷத்தில் அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ராம்சே கதாபாத்திரத்தை காண ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X