செல்வராகவனின் சாணிக்காகிதம்… ரிலீஸ் எப்போ தெரியுமா ?
சென்னை : செல்வராகவன் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் சாணிக்காகிதம் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இத்திரைப்படங்களில் மட்டுமே நடித்து வரும், கீர்த்தி சுரேஷ், இத்திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விக்ரம் வேதா, கைதி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சாணிக்காகிதம்
இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் என்ற படத்தில் உதவி இயக்குநராகவும், இறுதிச்சுற்று படத்தின் வசன எழுத்தாளருமான அருண் மாதேஸ்வரன் செல்வராகவனையும் கீர்த்தி சுரேஷையும் வைத்து சாணிக் காயிதம் படத்தை இயக்கினார். மேலும் அருண் மாதேஸ்வரன் ராக்கி என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் இத்திரைப்படம் வெளியீட்டுக்கு தயராக உள்ளது.

வரவேற்பை பெற்ற ஃபர்ஸ்ட் லுக்
இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 18-ஆம் தேதி நிறைவடைந்தது. இயக்குனர் செல்வராகவன் முதல் முறையாக நடிகராக அறிமுகமாவுள்ள திரைப்படம் என்பதால் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பாப்பு சற்று அதிகமாகவே உள்ளது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செல்வராகவனின் பிறந்தநாள் அன்று வெளியாகிவரவேற்பை பெற்றது.

பிப்ரவரியில் ரிலீஸ்?
இப்போது படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஓடிடி வெளியீட்டுக்கு முயற்சி நடக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது படத்தின் பின்னணி இசையமைப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் பிப்ரவரி மாதம் அமேசான் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

பீஸ்ட் படத்தில்
செல்வராகவன், பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கும் வில்லனாக நடித்து வருவதாக கூறுப்படுகிறது. செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு இவர்கள் இந்த திரைப்படத்தில் இணைய உள்ளனர். தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் செல்வராகவன் நடித்து வருவதால் இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











