கொஞ்சம் பொறுமையா இருங்க ப்ளீஸ்: சூர்யா ரசிகர்களுக்கு செல்வராகவன் வேண்டுகோள்
சென்னை: கொஞ்சம் பொறுமையாக காத்திருங்கள் என்று இயக்குனர் செல்வராகவன் சூர்யா ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
சாதாரணமாக செல்வா படம் என்றாலே ரிலீஸ் தேதியை காலண்டரில் ஆணி அடித்து வைத்து காத்திருந்து முதல் காட்சியைப் பார்ப்பவர்கள், சூர்யா நடிக்கிறார் என்பதால் எதிர்பார்ப்பின் உச்சத்தில் உள்ளனர்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் திரைப்படம் என்.ஜே.கே. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், வெளியாகாது என அறிவித்துவிட்டனர். தீபாவளிக்கு ரிலீஸ் ஆக அது ஒன்றும் பட்டாசு இல்லை என சூர்யாவும் சொல்லிவிட்டார்.
மேலும் 20 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் பலர் தங்களுடைய தலைமைப் பண்பை நிரூபிக்கின்றனர். நான் 70 களின் பிறந்தவன். இப்போதுள்ள ரசிகர்களை திருப்திபடுத்த கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது என படம் தள்ளிப்போவதற்கான காரணத்தைச் சொன்னார்.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள இயக்குனர் செல்வராகவன், ரசிகர்களே உங்கள் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். ஒரு அப்டேட் கொடுக்க வேண்டுமென்றாலும், நிறைய நாட்கள் அல்லது வாரங்கள் கவனமாகவும், எனர்ஜியுடனும் கடுமையாக உழைக்க வேண்டும். சும்மா போகிற போக்கில் ஒரு அப்டேட் கொடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். சரியான நேரம் வரும் என பதிவிட்டுள்ளார்.
அப்டேட் கொடுங்கள் என செல்வராகவனை ரசிகர்கள் தொல்லை செய்வதால் வேறு வழி இல்லாமல் இப்படி ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











