செம சர்ப்ரைஸ்.. தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் 2.. செல்வராகவன் போட்ட அதிரடி ட்வீட்!
சென்னை: இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் உருவாக உள்ள அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
Recommended Video

10 ஆண்டுகளுக்கு முன்பு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் திரைக்கு வந்தது.
இந்நிலையில், வரும் 2024ம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் 2 ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்வராகவனின் பிரம்மாண்டம்
பாகுபலி படத்திற்கு முன்பே தமிழில் ஹாலிவுட் படத்திற்கு நிகரான படமாக ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்குநர் செல்வராகன் இயக்கி இருந்தார். 2010ம் ஆண்டு வெளியான அந்த படத்திற்கு இன்னமும் ரசிகர்கள் உள்ளனர். இந்த புத்தாண்டை முன்னிட்டு பல திரையரங்குகளில் ஆயிரத்தில் ஒருவன் படமும் திரையிடப்பட்டது.
மீண்டும் தனுஷுடன்
இயக்குநர் செல்வராகவன் மீண்டும் தனது தம்பி தனுஷ் உடன் ஒரு படம் பண்ணப் போவதாக அறிவித்து இருந்தார். புதுப்பேட்டை 2 படத்தை தான் பண்ணப் போகிறேன் என கல்லூரி விழா ஒன்றிலும் கூறியிருந்தார். ஆனால், இந்நிலையில், ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகத்தை தனுஷை வைத்த இயக்க உள்ளார்.

எப்போ ரிலீஸ்
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் வரும் 2024ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் கைவசம் ஏகப்பட்ட படங்கள் உள்ள நிலையில், அந்த படங்களை முடித்து விட்டு, ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகத்தில் நடிப்பார் என தெரிகிறது.
ஒரு வருடம் ஆகும்
இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது ரசிகர்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் ப்ரீ புரடொக்ஷன் பணிகளை செய்யவே ஒரு வருடம் எடுத்துக் கொள்ளும், நீண்ட காத்திருப்பு தான் என்றாலும், அதற்கு வொர்த்தாக படம் இருக்கும் என உறுதி அளித்துள்ளார். சோழனின் பயணத்திற்கு ரசிகர்கள் இப்போதே ரெடியாகி விட்டனர்.


Click it and Unblock the Notifications











