செல்வராகவன் -நட்டி இணையும் பகாசூரன்... தலைப்பே வித்தியாசமா இருக்கே!

சேலம் : நடிகர் செல்வராகவன் அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் நடிகராக தன்னை இணைத்துக் கொண்டு வருகிறார். அவர் தற்போது மோகன் ஜி இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். நட்டியும் இந்தப் படத்தில் கமிட் ஆகியுள்ள நிலையில் படத்தின் பூஜை இன்றைய தினம் போடப்பட்டுள்ளது.

நடிகர் செல்வராகவன்

நடிகர் செல்வராகவன்

நடிகர் செல்வராகவன் அடுத்தடுத்த படங்களில் தன்னை நடிகராக இணைத்துக் கொண்டு வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் அவர் இணைந்து நடித்துள்ள படம் சாணிக் காயிதம். இந்தப் படத்தின் போஸ்டர்கள் மிரட்டலாக அமைந்துள்ளது. மேலும் அருண் மாதேஸ்வரனின் ராக்கி படம் சமீபத்தில் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீஸ்ட்டில் சிறப்பான நடிப்பு

பீஸ்ட்டில் சிறப்பான நடிப்பு

இதனிடையே செல்வராகவன் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் செல்வராகவன் நடிப்பில் முதல் படமாக வெளியாகியுள்ள இந்தப் படம் அவருக்கு சிறப்பான விமர்சனங்களை கொடுத்துள்ளது.

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன்

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன்

இதனிடையே பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் மோகன் ஜியின் அடுத்தப் படத்தில் செல்வராகவன் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் நட்டியும் இணைந்துள்ளார். இதுவும் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

பகாசூரன் தலைப்பு

பகாசூரன் தலைப்பு

இதனிடையே படத்தின் பூஜை இன்றைய தினம் போடப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு பகாசூரன் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மோகன் ஜியின் படங்கள் வித்தியாசமாக எடுக்கப்பட்டுவரும் நிலையில், இந்தப் படத்தின் தலைப்பு தற்போது வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் பூஜை

படத்தின் பூஜை

இந்தப் படத்தை ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்து வருகிறது. இந்நிலையில் படத்தின் பூஜை இன்றைய தினம் சேலம் அருகிலுள்ள முத்துமலை முருகன் கோயிலில் நடைபெற்றது. படப்பிடிப்பு வரும் திங்கட்கிழமை முதல் நடைபெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. செல்வராகவன் மற்றும் நட்டி நடிப்பில் உருவாகவுள்ள இந்தப் படம் ரசிகர்களின் சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநராக இருந்து நடிகராக மாறியுள்ளார் செல்வராகவன். இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் நிலையிலும் தன்னுடைய தம்பி தனுஷை வைத்து தற்போது நானே வருவேன் படத்தை எடுத்து முடித்துள்ளார். விரைவில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகவுள்ளது. இதனிடையே நட்டி நடராஜூம் தன்னை சிறப்பான நடிகராக நிலை நிறுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X