சூர்யாவுக்கும், ரகுலுக்கும் இடையே 'சம்பவம்' நடந்ததா?: செல்வராகவன் 'நச்' பதில்
Recommended Video
சென்னை: என்.ஜி.கே. படத்தில் சூர்யாவுக்கும், ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் இடையே சம்பவம் நடந்ததா என்கிற ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த என்.ஜி.கே. படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. படத்தை பார்த்தவர்கள் அதை கடுமையாக விமர்சித்தபோதிலும் பாக்ஸ் ஆபீஸில் அது ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அதிலும் குறிப்பாக சென்னை பாக்ஸ் ஆபீஸில் என்.ஜி.கே. வலுவான இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவிலும் என்.ஜி.கே.வை தமிழ் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
ரசிகர்கள்
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் என்.ஜி.கே. படம் பார்த்தவர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள பலகையில் தங்களின் கருத்துகளை துண்டுச்சீட்டில் எழுதி ஒட்டியுள்ளனர். அதில் ஒருவர் சூர்யாவுக்கும், ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் இடையே சம்பவம் நடந்ததா இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அந்த ரசிகரின் கேள்வியை ட்விட்டரில் வெளியிட்டு செல்வராகவனை பதில் அளிக்குமாறு தியேட்டர் சார்பில் கோரிக்கை விடுத்தனர்.
செல்வராகவன்
ரோகிணி தியேட்டர் சார்பில் போடப்பட்ட ட்வீட்டை பார்த்த செல்வராகவனோ, ம்ம்ம், சுவராஸ்யம். என்.ஜி.கே., வானதி இடையே ஏதாவது நடந்ததா? அந்த கேள்விக்கான பதில் இரண்டாம் பாதியில் என்.ஜி.கே. வானதியை ஹோட்டல் அறையில் சந்திக்கும் காட்சியில் உள்ளது என்று கூறி ரசிகர்களின் ஆவலைத் தூண்டிவிட்டுள்ளார்.
என்ஜிகே
வானதி மற்றும் என்.ஜி.கே. இடையே சம்பவம் நடந்தது. வானதி உடை மாற்றிவிட்டு வந்ததில் இருந்து தெரியவில்லையா. அதை காட்சியாக காட்டாமல் நாசுக்காக தெரிவித்துள்ளார் செல்வராகவன் என்று கூறி ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.
ரசிகர்கள்
செல்வராகவன் சார், படத்தில் பல சுவாரஸ்யங்கள் இருக்கிறது என்று தொடர்ந்து கூறும் நீங்களே சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள். மேலும் என்.ஜி.கே. படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வேண்டும் என்று கேட்கிறார்கள் சூர்யா ரசிகர்கள். அடப்பாவமே, மறுபடியும் முதலில் இருந்து அப்டேட் கேட்டு கதறப் போகிறார்களா?.


Click it and Unblock the Notifications











