For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கல்யாணப் பொண்ணா எப்படி கலக்குறாரு பாருங்க வித்யூலேகா.. குடும்பத்தோடு சென்று வாழ்த்திய செல்வராகவன்!

  |

  சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் காமெடி நடிகையாக கலக்கி வரும் நடிகை வித்யூலேகா ராமனின் இல்லத்தில் நடைபெற்ற திருமணத்துக்கு முந்தைய வரவேற்பு நிகழ்ச்சியில் (pre wedding function) இயக்குநர் செல்வராகவன் குடும்பத்தோடு கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

  இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் வெளியான நீதானே என் பொன் வசந்தம் படத்தில் காமெடி நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் வித்யூலேகா.

  துப்பாக்கியுடன் மிரட்டும் சமுத்திரக்கனி… வெளியானது நான் கடவுள் இல்லை மோஷன் போஸ்டர் !துப்பாக்கியுடன் மிரட்டும் சமுத்திரக்கனி… வெளியானது நான் கடவுள் இல்லை மோஷன் போஸ்டர் !

  தமிழ் சினிமாவின் பிரபல குணசித்ர நடிகரான மோகன் ராமின் மகள் தான் வித்யூலேகா என்பது குறிப்பிடத்தக்கது.

  குண்டு பேபி

  குண்டு பேபி

  நீதானே என் பொன் வசந்தம், தீயா வேலை செய்யணும் குமாரு, மாலினி 22 பாளையங்கோட்டை, வீரம், ஜில்லா, காக்கி சட்டை, புலி, வேதாளம், பாகமதி என பல படங்களில் காமெடி நடிகையாக நடித்து கலக்கியவர் வித்யூலேகா ராமன். குண்டு பேபியாக பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர் ஒரே அடியாக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்தார்.

  வெயிட்டை குறைத்து

  வெயிட்டை குறைத்து

  நல்லா பப்ளியாக இருக்கும் நடிகைகளை தொடர்ந்து பலரும் பாடி ஷேமிங் செய்து அவர்களை மனதளவில் காயப்படுத்தி விடுகின்றனர். நல்ல கொழு கொழுன்னு இருந்த வித்யூலேகா ராமனையும் அப்படி கலாய்த்து தள்ள கடின உடற்பயிற்சி செய்து தனது வெயிட்டை கணிசமாக குறைத்து ட்ரோல் செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார்.

  அப்பா மோகன் ராம்

  அப்பா மோகன் ராம்

  முரளியின் இதயம், கமலின் மகாநதி, விஜயகாந்தின் சேதுபதி ஐபிஎஸ், ஹானஸ்ட் ராஜ், ரஜினியின் படையப்பா என ஆரம்பித்து விஜய்சேதுபதியின் க/பெ ரணசிங்கம், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் குடந்தை ஜோசியராக நடித்து வரும் பிரபல குணசித்ர நடிகர் மோகன் ராமனின் மகள் தான் வித்யூலேகா ராமன் என்பது குறிப்பிடத்தக்கது.

  தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்

  தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்

  கீட்டோ எனும் வீகன் பொருட்களை விற்பனை செய்து வரும் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் உடன் கடந்த ஆண்டு லாக்டவுனில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வெறும் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அதில் கலந்து கொண்டனர். வருங்கால கணவர் சஞ்சய் உடன் வித்யூலேகா எடுத்துக் கொண்ட நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்துக்களை பெற்றார்.

  டும் டும் டும்

  டும் டும் டும்

  இந்நிலையில், நடிகை வித்யூலேகா ராமன் வீட்டில் டும் டும் டும் சத்தம் கொட்ட ஆரம்பித்து விட்டது. திருமணத்தை முன்னிட்டு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் குடும்ப நண்பர்களுடன் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

  செல்வராகவன் நேரில் வாழ்த்து

  செல்வராகவன் நேரில் வாழ்த்து

  மனைவி கீதாஞ்சலி மற்றும் குழந்தைகளுடன் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிக்கு சென்ற இயக்குநர் செல்வராகவன் நடிகை வித்யூலேகா ராமனை வாழ்த்திய புகைப்படங்களை அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

  BODY SHAMINGஆல் நான் பட்ட பாடு | மனம் திறந்த Karthi பட நடிகை Sanusha
  கல்யாண பொண்ணு

  கல்யாண பொண்ணு

  நடிகை வித்யூலேகா ராமன் முகத்தில் அப்படியே கல்யாண கலை தாண்டவமாடுகிறது. கீதாஞ்சலி செல்வரகாவன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களில் மணப் பெண் கோலத்தில் மங்களகரமாக காட்சி தரும் வித்யா லேகாவை பார்த்து ஏகப்பட்ட நடிகர்களும் ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.

  தனுஷ் மனைவி

  தனுஷ் மனைவி

  கீதாஞ்சலி செல்வராகவன் ஷேர் செய்த மெஹந்தி நிகழ்ச்சி புகைப்படங்களை பார்த்த ரஜினிகாந்தின் மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் ‘Beautiful beautiful' என கமெண்ட் போட்டு நடிகை வித்யூலேகா ராமனை வாழ்த்தி உள்ளார். விரைவில் திருமண புகைப்படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  English summary
  Comedy actress Vidhyulekha Raman pre wedding function happened recently in her home. Director Selvaraghavan and his wife Gitanjali Selvaraghavan attent the pre wedding function and shares the photos in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X