கோவில் பூசாரியாக மாறிய செல்வராகவன்..பகாசூரன் படத்தின் மிரட்டலான ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சென்னை : இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள பகாசூரன் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Recommended Video

Actor Suriya | ரசிகர்மன்ற நிர்வாகியின் மனைவியை படிப்புக்காக அயர்லாந்து அனுப்பிய சூர்யா

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை தாரக்ஷியும் இவர்களுடன் நட்டி என்கிற நட்ராஜ், ராதாரவி, கே. ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பாரூக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி. எஸ் இசையமைத்திருக்கிறார்.

இயக்குநர் செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவன்

திரைக்குப்பின்னால் நடிகர்களை வைத்து மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த இயக்குநர் செல்வராகவன் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷூடன் இணைந்து சாணிக்காயிதம் படத்தில் நடித்திருந்தார். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. கொலை,ரத்தக்களறி, பகை,பழிவாங்குதல் என வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்ட இப்படம் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

மோகன் ஜி

மோகன் ஜி

சாணிக்காயிதம் திரைப்படத்தை அடுத்து இயக்குநர் செல்வராகவன் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள பகாசூரன் படத்தில் நடித்துள்ளார். இவர் திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய இரு படங்களை இயக்கி உள்ளார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்க பட்டு வியாபார ரீதியாக வெற்றி பெற்ற இத்திரைப்படங்கள். ஆனால் அந்த படத்தின் கதைக்களம் ஒடுக்கப்பட்ட மக்களை இழிவாக சித்தரிக்கும் விதமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

பகாசூரன்

பகாசூரன்

மோகன் ஜி தனது அடுத்த படத்திற்கு பகாசூரன் தலைப்பு வைத்துள்ளார். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற வாக்கியத்துடன் மகாபாரத் புத்தகம் இடம்பெற்ற இபபடத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படத்தை மோகன் ஜியின் ஜிஎம் பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பர்ஸ்ட் லுக்ப போஸ்டர்

பர்ஸ்ட் லுக்ப போஸ்டர்

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் நெற்றியில் பட்டை, குங்குமமும், கழுத்தில் ருத்ராட்சை மாலை என கோவில் பூசாமி போல மிரட்டலாக நிற்கிறார் செல்வராகவன். அவரை மக்கள் கையேடுத்து கும்பிடுவது போல போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், ஆகஸ்ட் 28-ஆம் தேதி காலை 10.10 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X