செல்வராகவன் மீண்டும் தந்தையானார்.. இந்த முறை ஆண் குழந்தை!

By Sudha

சென்னை: இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி ராமன், அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

செல்வா - கீதாஞ்சலி தம்பதிக்கு இது இரண்டாவது குழந்தையாகும்.

ஏற்கனவே இத்தம்பதிக்கு அழகான பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2011ல் கல்யாணம்

2011ல் கல்யாணம்

2011ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி செல்வராகவனுக்கும், முன்னாள் அட்வகேட் ஜெனரல் ராமனின் மகள் கீதாஞ்சலிக்கும் திருமணம் நடந்தது.

வந்தாள் லீலாவதி

வந்தாள் லீலாவதி

திருமணமானதும் சீக்கிரத்திலேயே ஒரு மகளைப் பெற்றெடுத்தார் கீதாஞ்சலி. அந்தக் குழந்தைக்கு லீலாவதி என்று பெயரிட்டனர்.

மீண்டும் கர்ப்பம்

மீண்டும் கர்ப்பம்

இந்த நிலையில் மீண்டும் கர்ப்பவதியானார் கீதாஞ்சலி. தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

இந்த முறை பையன்

இந்த முறை பையன்

இந்த முறை அழகான ஆண் குழந்தையைப் பெற்றுள்ளார் கீதாஞ்சலி.

அசிஸ்டன்ட் டைரக்டர்

அசிஸ்டன்ட் டைரக்டர்

கீதாஞ்சலி, செல்வா திருமணம் காதல் திருமணமாகும். திருமணத்திற்கு முன்பு செல்வராகவனிடம் உதவி இயக்குநராக இருந்தார் கீதாஞ்சலி. பிறகு இருவரும் காதல்வயப்பட்டனர். திருமணத்தில் இது முடிந்தது.

இரண்டாம் உலகத்தில் பிசி

இரண்டாம் உலகத்தில் பிசி

செல்வராகவன் தற்போது இரண்டாம் உலகம் படத்தில் பிசியாக இருக்கிறார். ஆர்யா, அனுஷ்கா இதில் நடித்துள்ளனர். தீபாவளிக்குப் படம் ரிலீஸாகிறது.

செல்வா - கீதாஞ்சலி தம்பதிக்கு வாழ்த்துக்களைச் சொல்லுங்க...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X