Selvaraghavan Net Worth: ஜீனியஸ் செல்வராகவன் பிறந்தநாள்.. 47 வயதில் இத்தனை கோடி சொத்து இருக்கா?

சென்னை: இயக்குநர் கஸ்தூரி ராஜா மற்றும் விஜயலட்சுமி தம்பதியினருக்கு 1977 ஆம் ஆண்டு மார்ச் 5ம் தேதி தேனி மாவட்டத்தில் மூத்த மகனாக பிறந்தவர் செல்வராகவன். காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான செல்வராகவன் தனது 47 வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

தம்பி தனுஷ் 100 கோடிக்கு மேல் சொத்துக்களை வைத்திருக்கும் நிலையில், அண்ணன் செல்வராகவனின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

Selvaraghavan celebrates his 47th birthday today here we look about his net worth details

செல்வராகவன் பிறந்தநாள்: துள்ளுவதோ இளமை படத்திற்கு திரைக்கதை எழுதி தனது அப்பாவுக்கு உறுதுணையாக மாறிய செல்வராகவன் அடுத்து தனது தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என அடுத்தடுத்து பெரிய பெரிய சம்பவங்களை செய்து வந்தார். செல்வராகவன் இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருடைய படங்கள் மற்றும் காட்சிகளை வைத்து ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

குணா படத்தின் பாதிப்பு: செல்வராகவன் முதலில் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படமே குணா படத்தின் பாதிப்பு தான் என மஞ்சும்மெல் பாய்ஸ் ட்ரெண்டாகி வரும் நிலையில் பல தனுஷ் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். தனியாக ஒரு மலை பிரதேசத்தில் சோனியா அகர்வாலை கூட்டிக் கொண்டு சென்று தனுஷ் வைத்திருப்பார். கிளைமாக்ஸில் தனது காதலியின் காதலுக்காக தனது உயிரை தியாகம் செய்து விடுவார் என்கின்றனர். சமீபத்தில் வெளியான நானே ஒருவன் திரைப்படம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஆளவந்தான் படத்தின் பாதிப்பில் உருவான படம் தான் என்கின்றனர்.

இரண்டு முறை திருமணம்: நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்துகொண்ட செல்வராகவன் வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன் பின்னர் உதவி இயக்குனர் கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டு செல்வராகவன் மூன்று குழந்தைகளுக்கு தந்தையாக தற்போது சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அடிக்கடி மனைவியுடன் சேர்ந்து அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை ஹேப்பி ஆக்கி வருகின்றன.

Selvaraghavan celebrates his 47th birthday today here we look about his net worth details

சொத்து மதிப்பு: சென்னையில் செல்வராகவனுடன் தனியாக சொகுசு வீடு ஒன்று உள்ள நிலையில், அவரது சொத்து மதிப்பு 30 முதல் 40 கோடி ரூபாய் வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநராக பல படங்களை இயக்கி உள்ள செல்வராகவன் சமீப காலமாக நடிகராகவும் மாறி உள்ளார். விஜயின் பீஸ்ட், கீர்த்தி சுரேஷ் உடன் சாணிக் காயிதம், தனுஷுடன் நானே வருவேன், மோகன் ஜி இயக்கத்தில் வெளியான பகாசூரன், விஷால் நடித்து வெளியான மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தனது தம்பி தனுஷ் இயக்கி வரும் ராயன் படத்திலும் செல்வ ராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை 2: 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 என அடுத்தடுத்து 3 தரமான பார்ட் 2 படங்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பேட்டை 2 ஆரம்பிக்கும் என்று சமீபத்தில், செல்வராகவன் உறுதியளித்து இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X