அண்ணனுக்காக ஓடோடி வந்த தனுஷ்... மகிழ்ச்சியில் செல்வராகவன்... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட்டம்!

சென்னை: இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் நேற்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடினார்.

செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக் கூறியிருந்தனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் செல்வராகவனுக்கு ரொம்பவே ஸ்பெஷலாக வாழ்த்துத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தனுஷும் செல்வராகவன் பிறந்தநாளுக்காக நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றன.

 செல்வராகவன் பர்த்டே செலிப்ரேஷன்

செல்வராகவன் பர்த்டே செலிப்ரேஷன்

கோலிவுட்டின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் நேற்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடினார். பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியிருந்தனர். முக்கியமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஹேப்பி பர்த்டே மை கிரேஸி டியர், எப்போதும் அதீத அன்புடன் என தனது இன்ஸ்டாவில் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

 அண்ணனுக்காக ஓடோடி வந்த தனுஷ்

அண்ணனுக்காக ஓடோடி வந்த தனுஷ்

செல்வராகவனை கட்டிப்பிடித்துக் கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாழ்த்து சொன்ன போட்டோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், நடிகர் தனுஷும் அண்ணனின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். தனுஷின் கேரியரில் அவரது ஆரம்ப காலங்களில் மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தது செல்வராகவன் தான். கடந்தாண்டு கூட இருவரது கூட்டணியில் நானே வருவேன் திரைப்படம் வெளியாகியிருந்தது.

 மகிழ்ச்சியில் செல்வராகவன்

மகிழ்ச்சியில் செல்வராகவன்

இந்நிலையில், செல்வராகவன் பிறந்தநாளுக்கு தனுஷ் மட்டும் இல்லாமல், அவர்களது மொத்த குடும்பமும் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். செல்வராகவனின் அப்பா கஸ்தூரி ராஜா, அம்மா விஜயலட்சுமி, சகோதரிகள் விமலா கீதா, கார்த்திகா தேவி, அவர்களின் குடும்பத்தினரும் நேரில் சென்றுள்ளனர். அப்போது தனுஷ், செல்வராகவன், கஸ்தூரிராஜா உட்பட அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதனால் செல்வராகவன் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார்.

 திருஷ்டி சுத்தி போடுங்கப்பா

திருஷ்டி சுத்தி போடுங்கப்பா

செல்வராகவன், தனுஷ் ஆகியோர் தங்களது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வைரலானது. செல்வராகவனை தனுஷ் கட்டிப்பிடித்துக்கொண்டு நிற்க, அவர்களை சுற்றி கஸ்தூரி ராஜா, செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி, அம்மா விஜயலட்சுமி, சகோதரிகள், அவர்கள் இருவரின் கணவர்கள் ஆகியோரும் இருக்கின்றனர். இந்த ஃபேமிலி போட்டோ தனுஷ், செல்வராகவன் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த குடும்பத்துக்கு திருஷ்டி சுத்தி போடுங்கப்பா என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

 விரைவில் ஆயிரத்தில் ஒருவன் 2

விரைவில் ஆயிரத்தில் ஒருவன் 2

தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவான காதல் கொண்டேன் புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன் படங்கள் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் இணையவுள்ளது. இந்நிலையில், செல்வராகவன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்தது ஸ்பெஷலான மொமண்டாக பார்க்கப்படுகிறது.

இவர்கள் பாச மலர்கள்

இவர்கள் பாச மலர்கள்

அதேபோல், இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, செல்வராகவன், தனுஷ், விமலா கீதா, கார்த்திகா தேவி என உடன்பிறப்புகள் நால்வரும் மட்டும் தனியாக ஒரு போட்டோ எடுத்துள்ளனர். இந்த போட்டோவையும் தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை, வானத்தைப் போல ஃபேமிலி என பல கேப்ஷன்களில் அவர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X