Selvaraghavan: உன்னோட யாமினியை மட்டும் கண்டுபிடிச்சிட்டா.. லைஃப் செட்டில்டா தம்பி.. செல்வராகவன் பளீச்!
சென்னை: தமிழ் திரையுலகில் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான படங்கள் ரிலீஸ் ஆகின்றது. இதில் வெகு சில படங்கள் மட்டுமே கல்ட் கிளாசிக் வரிசையில் இடம் பெறுகின்றது. அப்படியான படங்கள் மட்டும்தான் மக்களால் என்றைக்கும் கொண்டாடப்படுகின்றது. அந்தவரிசையில் இடம் பெற்ற் படம்தான் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன படம். இந்தப் படம் வெளியாகி நேற்றுடன் அதாவது நவம்பர் 25ஆம் தேதியுடன் 13 ஆண்டுகள் ஆகின்றது. இந்நிலையில் இப்படம் குறித்த செய்தித் துணுக்கினை ஷேர் செய்த செல்வராகவன் அதற்கு அளித்துள்ள கமெண்ட் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு செல்வராகவன் எழுதி இயக்கி வெளியான படம், மயக்கம் என்ன. இந்தப் படத்தில் தனுஷ், ரிச்சா லங்கெல்லா, சுந்தர் ராமு, பூஜா தேவரையா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்தார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, வெற்றிப் படமாக மாறியது. மேலும் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களை கொண்டாடினர்.

படத்தில் தனுஷ்கு ஜோடியாக வரும் ரிச்சா லங்கெல்லாவின் கதாபாத்திரமான யாமினி கதாபாத்திரம் இப்போதுவரை இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற கதாபாத்திரமாக உள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான சூரைப் போற்று படம் ரிலீஸ் ஆனபோதுகூட, சூர்யாவின் ஜோடியாக நடித்த அபர்ணா பாலமுரளி கதாபாத்திரமான பொம்மி கதாபாத்திரத்தினை ரசிகர்கள் யாமினி கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டுக் கொண்டனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

விமர்சனம்: மயக்கம் என்ன படத்தினைப் பார்த்த இளைஞர்கள் பலரும் தங்களுக்கு யாமினி போன்ற பெண் வாழ்க்கைத்துணையாக இருக்க வேண்டும் என பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். அதேநேரத்தில் இந்தப் படத்தில் வரும் தனுஷ் கதாபாத்திரத்தினை பலரும் விமர்சித்தனர். கிட்டத்தட்ட சைக்கோ போல் இருக்கும் ஆணுக்காக ஒரு பெண் அவளது வாழ்க்கையை முற்றிலுமாக தியாகம் செய்வது என்பது எதார்த்தத்தில் சாத்தியம் இல்லை. இன்னும் சொல்லப்போனால், அந்த ஆணைப் பார்த்து கோபம்தான் வரவேண்டும், எப்படி காதல் வரும் எனத் தெரியவில்லை எனவும் விமர்சித்தனர்.

மயக்கம் என்ன?: அதேநேரத்தில் தனுஷ்ஷின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது படம் வெற்றி அடைய பெரும் காரணமாக அமைந்தது. படம் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளது. படம் வெளியாகி நேற்றுடன் 13 ஆண்டுகள் ஆகின்றது.

செல்வா கமெண்ட்: இந்நிலையில் படத்தின் 13 ஆண்டுகள் ரிலீஸ் தொடர்பான செய்தித் துணுக்கினை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த மயக்கம் என்ன படத்தின் இயக்குநர் செல்வராகவன், " உன்னோட யாமினியை மட்டும் நீ கண்டுபிடித்துவிட்டால், இந்த உலகத்திலேயே நீதான் அதிர்ஷ்டசாலி எனக் கமெண்ட் செய்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. தனுஷ்க்கு நாளை விவாகரத்து தொடர்பான தீர்ப்பு வரவுள்ளதால் இந்த நேரத்தில் செல்வராகவன் யாமினி குறித்து கமெண்ட் செய்தது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











