Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
செல்வராகவனை பொது மேடையில் வைத்து குறை கூறிய சகோதரிகள்... விழுந்து விழுந்து சிரித்த அவருடைய மனைவி
சென்னை: இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு நான்கு பிள்ளைகள். முதலும் கடைசியுமாக ஆண் பிள்ளைகள். நடுவில் இரண்டு பெண் குழந்தைகள்.
சினிமா இயக்குநராக இருந்தாலும், ஆரம்ப காலக்கட்டத்தில் மிகவும் ஏழ்மையாக வளர்ந்தவர்கள்தான் கஸ்தூரி ராஜா குடும்பத்தினர். செல்வா இயக்குநராகி, தனுஷ் நடிகரானதும்தான் அவர்களுடைய ஏழ்மை நீங்கியது.
சமீபத்தில் இயக்குநர் செல்வராகவன் தனது தங்கைகளுடன் ஒரு நேர் காணலில் கலந்து கொண்டார். அதில் பல சுவாரஸ்யமான தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இனிமேல் அந்த பொண்ணு வேண்டாம்ப்பா.. பிளாக் லிஸ்ட் செய்த தயாரிப்பாளர்கள்.. இப்படி ஆகிடுச்சே?

தனுஷின் ஆதங்கம்
சிறு வயதிலிருந்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தது தனுஷ்தான். காரணம் தனுஷ் குழந்தையாக இருந்தபோது செல்வராகவன் அவரை நன்கு வேலை வாங்குவாராம். சோஃபாவில் படுத்துக் கொண்டு புக் படித்திக் கொண்டிருந்தாலும், தனக்கு பிடித்த சேனலைதான் Tv-யில் வைப்பாராம். தனுஷை பிஸ்கட் வாங்கி வரச் சொல்லி அதனை ரசித்து ருசித்து முழு பாக்கட்டையும் தனுஷை வைத்துக் கொண்டே சாப்பிட்டு முடித்துவிடுவாராம். வாங்கி வந்த தனுஷிற்கு ஒரு பிஸ்கட் கூட குடுக்காமல் ஏமாற்றுவார் என்று தனுஷ் இன்னமும் ஆதங்கப்படுவார் என அவரது தங்கைகள் கூறியுள்ளனர்.

ஜூஸில் கலப்படம்
7 G ரெயின்போ காலனி திரைப்படத்தில் ஹீரோ ஆம்லெட்டை தின்பது போன்ற காட்சி அவரை வைத்துதான் எழுதியுள்ளார். அதே போல் கூல் டிரிங்க்ஸ் வாங்கி வந்தால், அதில் 90 சதவிகிதம் குடித்து முடித்துவிட்டு மிச்சத்தை போனால் போகட்டும் என்று தனுஷிடம் குடுப்பாராம். அவரும் அப்பாவியாக அதில் தண்ணீர், ஐஸ் கியூப்ஸ் எல்லாம் கலந்து முக்கால் பாட்டில் நிரப்பி அதனை ஜூஸ் என்று நினைத்து அவரது அண்ணனை போலவே ஒரு புக்கை எடுத்து வைத்துக் கொண்டு குடிப்பார் என்றும் கூறியுள்ளனர்.

தொடரும் தொடர் கதை
தங்களிடம்தான் இப்படி செய்கிறார் என்றால், இப்போதும் கூட தனது குழந்தைகளுக்கு வாங்கி வைத்துள்ள பிஸ்கட்டுகளை திருடித் திண்பாராம். வெளியிலிருந்து குழந்தைகளுக்கு ஐஸ் கிரீம் வாங்கி வந்தால், அவரது மனைவி அவருக்கு கொடுக்காமல் எடுத்துக் கொண்டு ஓடுவதுதான் இன்னமும் நடக்கிறதாம். அந்த அளவிற்கு செல்வராகவன் உணவுப் பிரியர் என்று அவரது சகோதரிகள் தெரிவித்துள்ளனர். சாப்பாட்டு விசயம் மட்டுமின்றி, அவருக்குள் இருக்கும் ஒரு குணம் பற்றியும் பொது வெளியில் போட்டு உடைத்துவிட்டனர்.

சீரியல் டைரக்டர்
செல்வா வெளியூருக்குச் சென்று வந்தால், முதலில் தனது அம்மாவிற்கு ஃபோன் கால் செய்து சமைக்கச் சொல்லி, ஒன்றாக சாப்பிட்டுவிட்டு, வீட்டிலுள்ள சோஃபாவில் அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஊர்க் கதை பேசுவதுதான் அவருடைய வேலையாம். எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டு, ஒவ்வொருவருக்கும் கால் செய்து 'உன்ன அந்த function-ல ஒதுக்கிட்டாங்களாமே... உன் அக்கா உன்ன பத்தி இப்படி சொன்னா' என்று அக்கா தங்கைகளுக்குள்ளேயே கோள் மூட்டி விடுவார். அவருக்குள் ஒரு சீரியல் டைரக்டர் ஒளிந்து கொன்டிருக்கிறார் என்று இரு தங்கைகளும் செல்வராகவனை கலாய்த்து தள்ளிவிட்டார்கள்.