நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன்.. திடீரென செல்வராகவன் வெளியிட்ட பதிவு!
சென்னை: இயக்குநர் செல்வராகவன் மற்றும் அவரது 2வது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவகிறது என்றும் செல்வராகவனை கீதாஞ்சலி பிரிந்து விட்டார் என்றும் ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகின. அதற்கு முக்கிய காரணமே செல்வராகவன் உடன் எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து கீதாஞ்சலி நீக்கியது தான் காரணம்.
ஆனால், இன்னமும் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் பெயரை கீதாஞ்சலி செல்வராகவன் என்றே பயன்படுத்தி வருகிறார். மேலும், விவாகரத்து வதந்திகள் பரவிய நிலையிலும், இருவரும் இன்னமும் அதிகாரப்பூர்வமாக பிரிவதாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், செல்வராகவன் தொடர்ந்து துரோகிகள் என மறைமுகமாக பதிவுகளை போட்டு வருவது பலரையும் ஷாக் ஆக்கியுள்ளது. இந்நிலையில், அவரது புதிய ட்வீட் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
ஜீனியஸ் இயக்குநர்: குடும்பமே கடனில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது ஜீனியஸ் செல்வராகவன் தான் தனுஷை வைத்து அப்பா இயக்க இளைஞர்களை கவரும் துள்ளுவதோ இளமை கதையை எழுதிக் கொடுத்தார். அந்த படத்தைத் தொடர்ந்து தனது தம்பி தனுஷை ஹீரோவாக வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கியும் வெற்றிக் கண்டார். அந்த படத்தில் அறிமுகமான நடிகை சோனியா அகர்வாலை தனது 7ஜி ரெயின்போ காலனி படத்திலும், மீண்டும் தம்பி தனுஷ் உடன் இணைந்த புதுப்பேட்டை படத்திலும் நடிக்க வைத்தார். அதன் பின்னர், சோனியா அகர்வாலை திருமணம் செய்துக் கொண்டார்.
சோனியா அகர்வாலுடன் விவாகரத்து: ஆயிரத்தில் ஒருவன் படத்தை செல்வராகவன் இயக்கி வந்த போது அவருக்கும் சோனியா அகர்வாலுக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலியை 2வதாக செல்வராகவன் திருமணம் செய்தார். ஆனால், இன்று வரை செல்வராகவனை பிரிந்த சோனியா அகர்வால் 2வது திருமணமே செய்துக் கொள்ளவில்லை.
நீயெல்லாம் கடவுளா: திடீரென உங்களுக்கு அனைத்தும் தவறாய் போகும். சுற்றியுள்ளவர்கள் அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும். நீயெல்லாம் கடவுளா ? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன் என பிதற்றுவீர்கள். அப்போது அமைதியாய் இருங்கள். சில காலம்தான். பெரும் மலை பனியாய் போகும். அனைத்தும் சரியாகி விடும். இது கடவுளின் நியதி! என தற்போது செல்வராகவன் பதிவிட்டுள்ள ட்வீட் பலரையும் ஷாக் ஆக்கியுள்ளது. செல்வராகவனுக்கு துரோகம் செய்தது யார் என்றும் கீதாஞ்சலிக்கும் அவருக்கும் என்ன பிரச்சனை என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். எந்த பிரச்சனையாக இருந்தாலும், சீக்கிரமே அந்த சிவன் சரி செய்து விடுவார் என்றும் ரசிகர்கள் ஓம் நமச்சிவாயா என கமெண்ட் போட்டு ஆறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











