Selvaraghavan: 7/G ரெயின்போ காலனி 2... அதே ஹீரோவுடன் ரெடியான செல்வராகவன்... அப்போ சோனியா அகர்வால்?

சென்னை: செல்வராகவன் இயக்கிய மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்று 7/ஜி ரெயின்போ காலனி.

ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் இருவரும் ஜோடியாக நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது.

யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், 7/ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க செல்வராகவன் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

 Selvaraghavan decided to make the second part of 7/G Rainbow Colony

7/G ரெயின்போ காலனி பார்ட் 2:செல்வராகவன் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான 7/ஜி ரெயினோ காலனி, 90ஸ் கிட்ஸ் இளைஞர்களின் ஃபேவரைட் படங்களில் ஒன்று. தயாரிப்பாளர் A.M ரத்னம் மகன் ரவி கிருஷ்ணா ஹீரோவாக அறிமுகமான இந்தப் படத்தில், சோனியா அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸிலும் இந்தப் படம் பட்டையை கிளப்பியிருந்தது.

இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாக செல்வராகவன் கூறியிருந்தார். அது அவருடைய சொந்த கதை தான் எனவும் சொல்லப்படுகிறது. நாயகன் ரவி கிருஷ்ணாவின் ஒரு தலைக்காதல் எப்படி சோனியாவின் மனதை தொடுகிறது, அதன் பின்னர் என்ன ஆனது என்பது தான் 7/ஜி ரெயின்போ காலனி படத்தின் கதை. ரவி கிருஷ்ணாவின் காதல் கைகூடி வரும் நேரம், சோனியா அகர்வால் விபத்தில் உயிரிழப்பதாக காட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருப்பார் செல்வராகவன்.

அதேபோல், யுவன் இசையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் எனலாம். நினைத்து நினைத்துப் பார்த்தால், கனா காணும் காலங்கள், நாம் வயதுக்கு வந்தோம், கண் பேசும் வார்த்தைகள், ஜனவரி மாதம் என வெரைட்டியாக ஹிட் கொடுத்திருப்பார் யுவன். செல்வராகவனின் ஆல்டைம் கிளாசிக் படமான இதன் இரண்டாவது பாகம் விரைவில் உருவாகவுள்ளதாம்.

தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் அல்லது புதுப்பேட்டை படங்களின் இரண்டாம் பாகம் உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக 7/ஜி ரெயின்போ காலனி செகண்ட் பார்ட் எடுக்க முடிவெடுத்துள்ளாராம் செல்வராகவன். அதுமட்டும் இல்லாமல் இந்தப் படத்திலும் ரவி கிருஷ்ணா தான் ஹீரோ என சொல்லப்படுகிறது.

 Selvaraghavan decided to make the second part of 7/G Rainbow Colony

7/ஜி ரெயின்போ காலனியின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் நாயகியாக சோனியா அகர்வால் நடிப்பாரா எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காதல் கொண்டேன், 7/ஜி ரெயின்போ காலனி படங்களின் படப்பிடிப்பின் போது தான் செல்வராகவனுக்கும் சோனியா அகர்வாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

அதன்பின்னர் 2006ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ்ந்த நிலையில், 2010ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதனால், 7/ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகத்தில் சோனியா அகர்வால் நடிப்பது சந்தேகமே என சொல்லப்படுகிறது. இந்நிலையில், விரைவில் 7/ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X