செல்வராகவன் - தனுஷ் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!
சென்னை: செல்வராகவன் தன்னுடைய அடுத்த படத்தின் பணிகளை இன்று தொடங்கியுள்ளார்.
Recommended Video

தனுஷ் நடிப்பில் தயாராக இருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இது குறித்து செல்வராகவன் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

அண்ணன் - தம்பி கூட்டணி
இயக்குனரும், நடிகர் தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் 2024ல் தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார். அதற்கு முன் ஒரு படத்தை வெளியிடும் முனைப்பில் அண்ணன்-தம்பி கூட்டணி ஒன்றிணைந்துள்ளது.

ரசிகர்கள் ஆர்வம்
செல்வா - தனுஷ் கூட்டணியில் வெளிவந்த 3 படங்களில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை என 2 படத்திற்கு யுவன் இசையமைத்தார். இரண்டு படங்களிலும் இசை பெரிய அளவில் வெற்றி பெற செல்வா - தனுஷ் - யுவன் கூட்டணி மீண்டும் இணைவதில் ரசிகர்கள் ஆர்வமடைந்துள்ளனர்.

தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்
கோலிவுட் சினிமாவில் தற்போது பல படங்களை கையில் வைத்து இருக்கும் தனுஷ் வேற லெவலில் கலக்கி வர அதனை தனுஷின் ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து செல்வராகவன் பதிவிட்ட ட்வீட் தனுஷ் ரசிகர்களை மேலும் குஷி படுத்தியுள்ளது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
செல்வராகவன் படத்தின் பணிகளை தொடங்கியது குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த படத்தில் தனுஷை தவிர வேறு எந்த நடிகர்கள் நடிக்கவுள்ளனர் என்ற அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. அடுத்தடுத்து வெளிவரவுள்ள அறிவிப்புகளை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











