»   »  மீண்டும் சிம்பு - த்ரிஷா... இயக்குகிறார் செல்வராகவன்!

மீண்டும் சிம்பு - த்ரிஷா... இயக்குகிறார் செல்வராகவன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்பு - த்ரிஷா மூன்றாம் முறையாக ஜோடி சேர்கின்றனர். இந்த ஜோடியை முதல் முறையாக இயக்குகிறார் செல்வராகவன்.

செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘இரண்டாம் உலகம்'. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாததால் அடுத்தடுத்து படங்களை அவரால் இயக்க முடியவில்லை.

மாலை நேரத்து மயக்கம்

மாலை நேரத்து மயக்கம்

நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தார். இந்நிலையில், இவர் இயக்குவதாக இருந்த ‘மாலை நேரத்து மயக்கம்' என்ற படத்தை தனது மனைவி செல்வரஞ்சனியை வைத்து இயக்க வைத்தார். அந்த படத்திற்கு இவர் திரைக்கதை அமைத்து வருகிறார்.

புதிய படம்

புதிய படம்

அடுத்து செல்வராகவன் தற்போது மீண்டும் படங்களை இயக்குகிறார். இவர் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமானார். இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. அந்த செய்தியை தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர். டாப்சியும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

மூன்றாவது முறை

மூன்றாவது முறை

சிம்புவும் த்ரிஷாவும் ஏற்கெனவே, ‘அலை', ‘விண்ணைத்தாண்டி வருவாயா' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதேபோல், செல்வராகவன் தெலுங்கில் இயக்கிய ‘ஆதவரி மடலக்கு அர்தலு வெருலே' என்ற படத்தில் த்ரிஷா நடித்திருந்தார்.

மே முதல் வாரம்

மே முதல் வாரம்

சிம்பு-த்ரிஷாவை வைத்து செல்வராகவன் இயக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பை மே முதல் வாரத்தில் தொடங்கவிருக்கின்றனர்.

English summary
Selvaraghavan is going to start his Simbu - Trisha project in the first week of May.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil