Selvaraghavan: முதல் தடவை பண்றதுல அப்படி என்னதான் இருந்ததோ..! செல்வராகவனின் கேள்வி புரிகிறதா?

சென்னை: தமிழ் திரையுலகில் தனித்துவமான இயக்குநர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் செல்வராகவன்.

தற்போது பீஸ்ட், பகாசூரன் படங்கள் மூலம் நடிகராகவும் தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.

அதேபோல், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் அடிக்கடி தனது அனுபவங்களை ட்வீட் செய்து வருகிறார்.

இந்நிலையில், முதல் காதல் குறித்து செல்வராகவன் ட்வீட் செய்துள்ளது வைரலாகி வருகிறது.

 Selvaraghavan: Director Selvaraghavan tweet on first love is trending

செல்வராகவனின் முதல் காதல் ட்வீட்: காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி போன்ற காதல் திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் இயக்குநர் என கொண்டாடப்பட்டவர் செல்வராகவன். அதேபோல், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரானார். தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார் செல்வராகவன்.

சமீபத்தில் கூட செல்வராகவன் நடிப்பில் பகாசுரன் திரைப்படம் வெளியானது. ஆனால், முதிர்ச்சியான அனுபவம் கொண்ட செல்வராகவன், இதுமாதிரியான பிற்போக்குத்தனம் நிறைந்த படத்தில் நடிப்பதா என பலரும் விமர்சித்திருந்தனர். இன்னொரு பக்கம் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன், அடிக்கடி தனது அனுபவங்களை ட்வீட் செய்து வருகிறார்.

பணம், நண்பர்கள், வாழ்க்கை என தத்துவாந்த ரீதியாக ட்வீட் செய்து வந்த செல்வராகவன், தற்போது முதல் காதல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதில், "அந்த முதல் காதலில் அப்படி என்னதான் இருந்ததோ! நினைத்து நினைத்து ஆயுள் முடிந்தது! அது வாழ்க்கையில் ஒரு முறைதான் என்பதை கடவுளும் நம்மிடம் கூறவில்லை" என பதிவிட்டுள்ளார்.

 Selvaraghavan: Director Selvaraghavan tweet on first love is trending

செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவானது. முக்கியமாக இந்தப் படத்தின் கதை செல்வராகவனின் நிஜ வாழ்வில் நடந்தது என்றும் சொல்லப்படுவது உண்டு. இந்தப் படத்தில் நாயகி சோனியா அகர்வால் விபத்தில் உயிரிழக்க, ஹீரோ அவரையே நினைத்துக் கொண்டிருப்பான்.

செல்வராகவனின் தற்போதைய முதல் காதல் குறித்த டிவிட்டர் பதிவின் பின்னணி, இந்த சம்பவமாக தான் இருக்கும் என ரசிகர்கள் பேசி வருகின்றனர். செல்வராகவனின் டிவிட்டர் பதிவை சரியாக புரிந்துகொண்ட ஒரு ரசிகர், "இன்னும் இங்கு பல கதிர்.... ஆனால் ஒரு அனிதாவை பார்க்க முடியவில்லை" என கமெண்ட்ஸ் செய்துள்ளார். இன்னொரு ரசிகரோ, "அது உருப்படாம தான் போகும் என்பதையும் கடவுளும் நம்மிடம் கூறவில்லை சார்" என காமெடியாக ரீப்ளை செய்துள்ளார்.

இதுதவிர பலரும் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்களின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என கேட்டு வருகின்றனர். செல்வராகவனின் முதல் காதல் குறித்த ட்வீட், இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு புரியாத புதிராக இருப்பதாகவும், சிலர் கமெண்ட்ஸ் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X