சொந்த அனுபவத்தை படமாக்கிய செல்வராகவன்... எந்தப் படம்னு பாருங்க!
சென்னை : இயக்குநர் செல்வராகவன் தமிழ் சினிமாவை உச்சத்திற்கு கொண்டு சென்ற இயக்குநர்களில் ஒருவர். இவரது 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, புதுப்பேட்டை போன்ற படங்கள் உணர்ச்சிக் காவியங்களாக இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன. ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட்டாக அமைந்துள்ளன.

இயக்குநர் செல்வராகவன்
இயக்குநர் செல்வராகவன், துள்ளுவதோ இளமை படத்தில் கதை, திரைக்கதையை எழுதி திரையுலகில் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டார். தொடர்ந்து தனுஷை நாயகனாக வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கி அதை வெற்றிப் படமாக்கினார். இந்தப் படத்தின் மூலம் தன்னை சிறப்பான இயக்குநராக கோலிவுட்டில் நிலைநிறுத்திக் கொண்டார்.

உணர்வுபூர்வமான படங்கள்
அடுத்தடுத்து 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் காலத்தால் அழியாதவை என்ற பெயரை தமிழ் சினிமாவில் பெற்றன. கடந்த ஆண்டில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

சூட்டிங் முடிந்த நானே வருவேன்
தொடர்ந்து தற்போது நீண்ட கால இடைவெளிக்கு பிறகு தனுஷின் நடிப்பில் இவர் நானே வருவேன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.

விரைவில் ரிலீஸ்
விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தன்னுடைய உடல் எடையை சற்று அதிகரித்து தனுஷ் காணப்படுகிறார். இதனிடையே செல்வராகவன் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் சிறப்பான வரவேற்பை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது.
Recommended Video

படமாகிய சொந்த அனுபவம்
தொடர்ந்து தற்போது நீண்ட கால இடைவெளிக்கு பிறகு தனுஷின் நடிப்பில் இவர் நானே வருவேன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications











