என் கூடப் பிறந்த தங்கச்சி கூட இப்படி என்னை கவனிச்சது இல்லை: அனுஷ்கா பற்றி செல்வராகவன்
ஹைதராபாத்: தன் கூடப் பிறந்த தங்கை கூட அனுஷ்கா போன்று தன்னை கவனித்துக் கொண்டது கிடையாது என்று இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
ஆர்யா, அனுஷ்காவை வைத்து செல்வராகவன் எடுத்திருக்கும் படம் இரண்டாம் உலகம். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தனர்.
ஆனால் தீபாவளிக்கு ஆரம்பம், ஆல் இன் அழகு ராஜா என்று படங்கள் படையெடுத்ததால் இரண்டாம் உலகம் படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 22ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் உலகம் தெலுங்கில் வர்ணா என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது.

வர்ணா இசை வெளியீடு
இரண்டாம் உலகம் தெலுங்கு பதிப்பின் இசை வெளியீட்டு விழா அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. விழாவில் செல்வராகவன் கலந்து கொண்டு பேசினார்.

உலக அளவு
இனி பாலிவுட், ஹாலிவுட் என்று கூறாதீர்கள். இனிமேல் தென்னிந்திய சினிமா தான் பேசப்படப்படும். ராஜமௌலி, நான், தமிழிலில் பல இயக்குனர்கள், மலையாளம், கன்னடத்தில் சிலர் சேர்ந்து தென்னிந்திய சினிமாவை உலக அளவில் கொண்டு போகப் போகிறோம் என்றார் செல்வராகவன்.

அனுஷ்கா
இரண்டாம் உலகம் படத்தின் நாயகி அனுஷ்கா என் தங்கை போன்றவர். அனுஷ்கா போன்று என்னுடன் பிறந்த தங்கை கூட இப்படி என்னை கவனித்துக் கொண்டதில்லை. அவருக்கு என் மீது அப்படி ஒரு அக்கறை என்று செல்வராகவன் நெகிழ்ந்தார்.

ஹீரோ நானில்லை
செல்வராகவனை அடுத்து பேசிய ஆர்யா, படத்தின் ஹீரோ தானில்லை என்றும் அது அனுஷ்கா தான் என்றும் தெரிவித்தார். டிரெய்லரை பார்த்தால் அது உங்களுக்கே புரியும் என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

புரட்டி எடுக்கும் அனுஷ்கா
ஆர்யா அமர்ந்த உடன் படத்தின் டிரெய்லர் போட்டுக் காண்பிக்கப்பட்டது. அதில் அனுஷ்கா ஆர்யாவை அடித்து துவைத்து எடுக்கும் காட்சி அனைவரையும் மிரள வைத்தது.


Click it and Unblock the Notifications











