அந்த குதூகலம் வருமோ!!!: தனுஷ் பற்றி செல்வராகவன் ட்வீட்
Recommended Video

சென்னை: அந்த குதூகலம் வருமோ என்று தனது தம்பி தனுஷ் பற்றி ட்வீட்டியுள்ளார் இயக்குனர் செல்வராகவன்.
திரையுலக பிரபலங்கள் பொங்கல் பண்டிகையை தங்களின் குடும்பத்தாருடன் கொண்டாடியுள்ளனர். சூர்யா மட்டும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்து கொள்ள ஆந்திரா சென்றுவிட்டார்.
இந்நிலையில் பொங்கல் கொண்டாட்டம் பற்றி இயக்குனர் செல்வராகவன் ட்வீட்டியுள்ளார்.
தனுஷ்
அன்பு தம்பியுடன் அருமைப் பொங்கல்..ஆயிரம் ஆனந்தங்கள் இருந்தாலும் கூடப் பிறந்தவர் கூட்டம் கூடிக் குலாவும் குதூகலம் வருமோ!!! 🤗🤗🤗🤗 என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் செல்வராகவன்.

சூர்யா
செல்வராகவன் சூர்யாவை வைத்து படம் எடுக்க உள்ளார். அந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என்று இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா.
அப்டேட்
சூர்யா ரசிகர்களுக்கு எப்பொழுதுமே அப்டேட் கேட்பது வழக்கமாகிவிட்டது. இத்தனை நாட்களாக விக்னேஷ் சிவனிடம் கேட்டார்கள். தற்போது செல்வராகவனிடம் கேட்கத் துவங்கியுள்ளனர்.
அருமை
செல்வராகவன், தனுஷ் ஆகிய இருவரையும் சேர்த்து பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அம்மாவிடம் சொல்லி சுத்திப் போடுங்க என்று கூட சிலர் தெரிவித்துள்ளனர். சிலரோ செல்வா, தனுஷ் மீண்டும் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











