விவாகரத்தும் இல்லை.. சண்டையும் இல்லை.. மனைவியிடம் சரணடைந்த செல்வராகவன்.. இதெல்லாம் தேவையா?
சென்னை : இயக்குநர் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலியை விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக இணையத்தில் ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இந்த வதந்திக்கு செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இயக்குவதில் கை தேர்ந்தவர். இவர் இயக்கத்தில் உருவான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆனாலும், இன்னும் இளசுகளின் பேவரைட் திரைப்படமாகவே உள்ளது.
இயக்குநராக இருந்த செல்வராகவன் பீஸ்ட் படத்தில் நடித்து நடிகராக மாறி சாணி காயிதம், பாகசூரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

செல்வராகவன்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படம் அதிரடி திரில்லர் திரைப்படமாக வெளியானது. இதில் தனுஷ் அண்ணன் தம்பியாக ஹீரோ மற்றும் வில்லன் என்ற இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இந்த படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்த போதும் சிறப்பான வசூலை பெறவில்லை.

தனியாகத்தான் வந்தோம்
இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு தினங்களுக்கு முன் தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும் என பதிவிட்டு இருந்தார். அவர் போட்ட இந்த பதிவு இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது. செல்வராகவன் இரண்டாவது முறையாக விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் சோஷியல் மீடியாவில் காட்டுத்தீபோல பரவியது.

சரணடைந்த செல்வராகவன்
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இயக்குநர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி கீதாஞ்சலி மற்றும் மகள் லீலாவதியுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து MY Life, My Girl கீதாஞ்சலி என பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் பாவம் மனுஷன் சும்மாத்தான் ஏதோ தத்துவத்தை போட இப்படி பண்ணிட்டீங்களே என செல்வராகவனை கிண்டலடித்து வருகின்றனர்.

விவாகரத்து செய்தார்
இயக்குநர் செல்வராகவன் சோனியா அகர்வாலை 2006ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக 2010ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த செல்வராகவன், 2011ம் ஆண்டு கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











