twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு செல்லும் மலையாள ’ஜல்லிக்கட்டு..’ இயக்குனர் செல்வராகவன் இப்படி கணிப்பு!

    By
    |

    சென்னை: ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு, விருதை வெல்ல வாய்ப்பிருப்பதாக, இயக்குனர் செல்வராகவன் பாராட்டியுள்ளார்.

    Recommended Video

    Oscar Awards | India சார்பில் போட்டியிட Jallikattu தேர்வு | Filmibeat Tamil

    லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய மலையாளப் படம், ஜல்லிக்கட்டு. ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சபுமோன் அப்துசமாத், சாந்தி பாலச்சந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர்.

    மலையாள எழுத்தாளர் ஹரீஷ் எஸ். எழுதியிருந்த மாவோயிஸ்ட் என்ற சிறுகதையின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது.

    யாரை பேசுற.. ரைடு விடும் சனம் அன்ட் அனிதா.. கடுப்பான ரியோ.. ஓடிறு என வார்னிங்.. மிரளவிடும் புரமோ!யாரை பேசுற.. ரைடு விடும் சனம் அன்ட் அனிதா.. கடுப்பான ரியோ.. ஓடிறு என வார்னிங்.. மிரளவிடும் புரமோ!

    மாட்டைப் பிடிக்க

    மாட்டைப் பிடிக்க

    2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
    இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சபுமோன் அப்துசமாத், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இறைச்சிக் கூடத்தில் இருந்து தப்பிக்கும் மாட்டை, கிராம மக்கள் பிடிக்க முயற்சிக்கின்றனர். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

    திரைப்பட கூட்டமைப்பு

    திரைப்பட கூட்டமைப்பு

    இந்தப் படத்தின் இயக்குனர் லிஜோ இந்தப் படத்துக்கு முன், ஆமென், அங்கமாலி டைரிஸ் படங்களை இயக்கியவர். இந்தப் படத்தை, இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப, இந்திய திரைப்பட கூட்டமைப்பு தேர்வு செய்துள்ளது. சிறந்த வெளிநாட்டுப் பிரிவுக்கு இந்தப் படம் அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டு, ரன்வீர் சிங், ஆலியா பட் நடித்த சோயா அக்தரின் கல்லி பாய் தேர்வானது.

    மூன்றாவது படம்

    மூன்றாவது படம்

    1997 ஆம் ஆண்டு குரு, 2011 ஆண்டு ஆதாமிண்டே மகன் அபு ஆகிய படங்களுக்கு பிறகு ஆஸ்கர் விருதுக்கு செல்லும் மூன்றாவது மலையாளத் திரைப்படம், இது. 93 வது ஆஸ்கர் விருதுகள் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது. இதையடுத்து ஜல்லிகட்டு டீமுக்கு பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ஆஸ்கர் மகிழ்ச்சி

    ஆஸ்கர் மகிழ்ச்சி

    இந்நிலையில் இயக்குனர் செல்வராகவனும் ஜல்லிக்கட்டு டீமுக்கு பாராட்டைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர், 'ஜல்லிக்கட்டு' படத்தைப் பார்த்து ரசித்தேன். இந்தப் படம் இந்தியாவின் பரிந்துரையாக ஆஸ்கருக்குச் செல்வதில் மகிழ்ச்சி. இந்த அழகான படத்தால் விருதை வெல்ல வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

    English summary
    Selvaraghavan is all praise for Lijo Jose Pellissery after his film Jallikattu became India’s official entry for the Oscar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X