அடுத்த பட ஸ்கிரிப்ட் வேலையை ஆரம்பித்த செல்வராகவன்.. 'அது அந்த படம் தானா?'.. ஆர்வத்தில் ரசிகர்கள்!
இயக்குனர் செல்வராகவன் தனது அடுத்தப்படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.
சென்னை: இயக்குனர் செல்வராகவன் தனது அடுத்தப்படத்துக்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் செல்வராகவன். இவரது படங்களுக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் என்ஜிகே. சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் படுதோல்வியடைந்தது. இதனால் செல்வராகவன் செம அப்செட் ஆனார்.
இந்நிலையில் செல்வா தனது அடுத்தப்படத்துக்கான வேலையை ஆரம்பித்துவிட்டார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர், ஒரு மடிக்கணினி படத்தை பதிவிட்டு, "திரைக்கதை எழுதுவதைவிட வேறெதுவும் மகிழ்ச்சியை தராது", என குறிப்பிட்டுள்ளார்.
செல்வராகவனின் இந்த பதிவை பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தான் எந்த படத்திற்கு திரைக்கதை எழுதுகிறேன் என்பதை செல்வராகவன் இன்னும் தெரிவிக்கவில்லை. தற்போது அவர் திரைக்கதை எழுதுவது, புதுப்பேட்டை 2 அல்லது ஆயிரத்தில் ஒருவன் 2 ஆக இருக்கலாம் என தெரிகிறது.
தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை செல்வா இயக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியானது. ஒருவேளை அந்த படத்துக்கான திரைக்கதையாகக் கூட இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதுவாக இருந்தாலும், ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்லி, எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டார் செல்வா என்பது மட்டும் நிச்சயம்.


Click it and Unblock the Notifications











