மீண்டும் தனுஷுடன் கைகோர்க்கும் செல்வராகவன்.. தமிழ் - இந்தியில் இயக்குகிறார்!

By Siva

சென்னை: இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு மீண்டும் தனுஷுடன் கைகோர்க்கிறார் செல்வராகவன்.

செல்வராகவன் தனது தந்தை கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தம்பி தனுஷ் நாயகனாக நடித்த துள்ளுவதோ இளமை படத்தில் எழுத்தாளராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் தனுஷை வைத்து காதல் கொண்டேன் என்ற படத்தை இயக்கினார்.

காதல் கொண்டேன் நாயகி சோனியா அக்ரவாலை காதலித்து மணந்தார். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர்.

கீதாஞ்சலி

கீதாஞ்சலி

செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை கடந்த 2011ம் ஆண்டு மணந்தார். அவர்களுக்கு லீலாவதி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் கீதாஞ்சலிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவிருக்கிறது.

அடுத்து தனுஷுடன்...

அடுத்து தனுஷுடன்...

செல்வராகவன் ஆர்யா, அனுஷ்காவை வைத்து எடுத்துள்ள இரண்டாம் உலகம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்துக்குப் பிறகு சிறிய ஓய்வெடுத்து, உடல்நிலையைத் தேற்றிக் கொண்டு மீண்டும் முழுவீச்சில் களமிறங்குகிறார் செல்வராகவன்.

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம்...

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம்...

பேன்டசி கதைகள், சரித்திக் கதைகளை இயக்குவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள செல்வராகவன், அடுத்து தம்பி தனுஷை வைத்து தனது நீண்ட நாள் கனவான இந்திப் படத்தை இயக்கப் போகிறாராம். தனுஷுக்கு இந்தியிலும் மார்க்கெட் இருப்பதால், அதை தமிழ் - இந்தியில் உருவாக்கப் போகிறாராம்.

அடுத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்துக்கும் ஸ்க்ரிப்ட் தயார் செய்யப் போகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X