விஷால், எஸ்ஜே சூர்யா மோதல்... நடுவில் என்ட்ரியான செல்வராகவன்: மார்க் ஆண்டனி அப்டேட்!

சென்னை: விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் விஷாலுக்கு வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் விபத்து நடந்தது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தப் படத்தில் விஷாலும் எஸ்ஜே சூர்யாவும் எதிரும் புதிருமாக நடித்து வரும் நிலையில், இக்கூட்டணியில் செல்வராகவனும் இணைந்துள்ளார்.

 மார்க் ஆண்டனி ஷூட்டிங்கில் விபத்து

மார்க் ஆண்டனி ஷூட்டிங்கில் விபத்து

எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி படங்களால் மார்க்கெட் இல்லாமல் போராடி வரும் விஷாலுக்கு, மார்க் ஆண்டனி மட்டுமே தற்போது கைவசம் உள்ளது. த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ஆதிக் ரவிச்சந்திரன் தான் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ஆனால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான பஹீரா, கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

 கேங்ஸ்டரில் இணைந்த பகாசுரன்

கேங்ஸ்டரில் இணைந்த பகாசுரன்

விஷால், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வரும் இந்தப் படம் பக்கா கேங்ஸ்டர் ஜானரில் உருவாகி வருகிறது. அதேபோல், விஷால், எஸ்ஜே சூர்யா இருவருமே இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. விஷால் மார்க் ஆண்டனி கேரக்டரிலும் எஸ்ஜே சூர்யா ஜாக்கி பாண்டியன் என்ற பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இருவரும் எதிரும் புதிருமாக மோதி வரும் இந்தப் படத்தில் தற்போது செல்வராகவனும் நடித்து வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.

 சிரஞ்சீவி போஸ்டர் வெளியீடு

சிரஞ்சீவி போஸ்டர் வெளியீடு

மார்க் ஆண்டனி படத்தில் இருந்து இதுவரை விஷால், எஸ்ஜே சூர்யா இருவரின் போஸ்டரும் ஏற்கனவே வெளியாகி இருந்தது. சில தினங்களுக்கு முன்னர், புஷ்பா படத்தில் மங்களம் சீனுவாக நடித்த சுனிலும் மார்க் ஆண்டனியில் இணைந்தார். இந்த வரிசையில் தற்போது செல்வராகவன் நடிப்பதும் உறுதியாகியுள்ளது. மேலும், செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கேரக்டர் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அவர் சிரஞ்சீவி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

 விபத்தில் தப்பிய விஷால்

விபத்தில் தப்பிய விஷால்

இந்த போஸ்டரில் கர்லிங் ஹேர், கூலர்ஸ் என ரெட்ரோ லுக்கில் மிரட்டலாக இருக்கிறார் செல்வராகவன். ஏற்கனவே வெளியான விஷால், எஸ்ஜே சூர்யா போஸ்டர்களும் ரெட்ரோ லுக்கில் தான் இருந்தன. பீஸ்ட், சாணிக்காயிதம், பகாசுரன் என அடுத்தடுத்து நடிப்பில் அசத்தி வரும் செல்வராகவன், மார்க் ஆண்டனியில் இன்னும் வெறித்தனமாக மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மார்க் ஆண்டனி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சில தினங்களுக்கு முன்னர் விபத்து நடந்ததிருந்தது. இதில் விஷால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

 விரைவில் ரிலீஸ் தேதி

விரைவில் ரிலீஸ் தேதி

இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் இந்தப் படம் விரைவில் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் மிக வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். மார்க் ஆண்டனி வெளியான பின்னர் தான் விஷாலின் அடுத்தப் படம் குறித்த அப்டேட் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X