படு பிஸியாகும் செல்வராகவன்… அடுத்தடுத்து குவியும் படவாய்ப்பு !

சென்னை : இயக்குனர் செல்வராகவன் மோகன் ஜி இயக்க உள்ள அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

Recommended Video

மனைவியை மிஸ் பண்ற செல்வ ராகவனின் வைரல் ட்வீட்- வீடியோ

துள்ளுவதோ இளமை படம் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற வெற்றிப்படங்களை இயக்கி உள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் முதன்முறையாக சாணிக் காகிதம் திரைப்படத்தில் கதாநாயகனான நடித்துள்ளார்.

திரௌபதி

திரௌபதி

சர்ச்சைக்குரிய விஷயங்களை திரைப்படங்களாக எடுப்பதில் பெயர் பெற்ற இயக்குனர் மோகன்.ஜி. இவர் கடந்த ஆண்டு ரிஷி ரிச்சர்ட், ஷீலா நடிப்பில் வெளியான படம் திரௌபதி திரைப்படத்தை இயக்கினர். இத்திரைப்படம் அதிகலாபத்தை ஈட்டி பலரின் விமர்சனங்களுக்கு ஆளானது.

ருத்ரதாண்டவம்

ருத்ரதாண்டவம்

இதையடுத்து, ருத்ர தாண்டவம் என்னும் படத்தை இயக்கினார் இதில் ரிஷி ரிச்சர்ட், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படமும் பலவிதமான சர்ச்சையில் சிக்கி சர்ச்சைக்குரிய இயக்குனராக ஆனார். இப்படத்தில் கௌதம் மேனனை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார் மோகன் ஜி.

செல்வராகவனுடன்

செல்வராகவனுடன்

இந்நிலையில், மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, தனது அடுத்த படத்தில் செல்வராகவன் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய மோகன் ஜி, நான் ஏற்கனவே கௌதம் மேனனுடன் பணிபுரிந்ததால், இன்னொரு இயக்குனரை வைத்து படத்தை இயக்குவது எனக்கு வசதியாக இருக்கும். இயக்குநர்கள் நடிகர்களாக மாறும்போது, ​​ஒரு நடிகராக புதிய பரிமாணத்தைக் கொண்டு வருகிறார்கள்.

அவருக்கு கதை பிடித்துவிட்டது

அவருக்கு கதை பிடித்துவிட்டது

செல்வராகவனின் வயதில் எனக்கு ஒரு ஹீரோ தேவைப்பட்டார். சாணிக்காயிதம் திரைப்படத்தின் டிரைலரை பார்தேன், மனுஷன் ஒரு மிருகம் போல் நடித்திருக்கிறார். அதுவும் இல்லாமல் அவரின் தோற்றம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. செல்வராகவனிடம் கதையை கூறினேன், கதையை கேட்டார் அது அவருக்குப் பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார் என கூறினார்.

படு பிஸி

படு பிஸி

சாணிக்காயிதம் படத்தில் நடித்து முடித்துள்ள செல்வராகவன் தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். தற்போது மோகன் ஜி திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.இயக்குனராக செல்வராகவனுக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் இவர், தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்குகிறார். அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X