என்ன இப்படி ஆக்ரோஷமா நடிச்சிருக்காங்க கீர்த்தி... அப்படி என்னதான் நடந்துருக்கும்?
சென்னை : நடிகரும் இயக்குநருமான செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் சாணிக்காயிதம். இந்தப் படம் வரும் 6ம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரெயிலர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் புதிய மிரட்டலான ப்ரமோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் செல்வராகவன்
பிரபல இயக்குநர் செல்வராகவன் புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர். தற்போது அவரது சகோதரரை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிப்பில் கவனம்
இதனிடையே செல்வராகவன் நடிப்பிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியானது பீஸ்ட். இந்தப் படத்தில் அவரது நடிப்பிற்கு பாசிட்டிவ் கமெண்ட்ஸ் கிடைத்துள்ளது. இந்நிலையில் அவரது அறிமுக படமான சாணிக் காயிதம் படம் வரும் 6ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.

சாணிக் காயிதம் படம்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் செல்வராகவன் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அருண் மாதேஸ்வரனின் முந்தைய படம் ராக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் தற்போது சாணிக் காயிதம் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிரட்டலான ட்ரெயிலர்
செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகி மிரட்டியது. பழிவாங்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தனக்கு ஏற்பட்ட கொடுமைக்கு பழிவாங்க செல்வராகவனின் உதவியை கீர்த்தி சுரேஷ் நாடுவதாக கதைக்களம் காணப்படுகிறது.

ஆக்ரோஷமான கீர்த்தி சுரேஷ்
இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய ப்ரமோவும் மிரட்டுகிறது. கீர்த்தி சுரேஷ் இந்த ப்ரமோவில், கைகளைக் கொண்டு வெட்டுவது போன்று செயல்படுகிறார். அவரது செயல்பாட்டில் பழிவாங்கும் வெறி, ஆக்ரோஷம், கண்களில் விரக்தி போன்றவை காணப்படுகின்றன. செல்வராகவன், துப்பாக்கியை பற்றி பேசுகிறார். சிறப்பாக காணப்படுகிறது ப்ரமோ.

செல்வராகவன் என்ற நடிகர்
செல்வராகவன் என்ற இயக்குநருக்குள் ஒரு நடிகர் ஒளிந்துக் கொண்டிருக்கிறார் என்பதை கண்டுபிடித்து அவரை நடிகராக அறிமுகப்படுத்தியுள்ளார் அருண் மாதேஸ்வரன். இந்தப் படத்தின் ட்ரெயிலர், ப்ரமோக்களை பார்க்கும்போது செல்வராகவனின் அறிமுக படமாக இது தோன்றவில்லை. படத்தின் வெளியீட்டிற்காக தற்போதே ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











