”புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும்”.. செல்வராகவன் ட்வீட்.. குவியும் கோவிஷீல்டு கமெண்ட்ஸ்!

சென்னை: இயக்குநர் செல்வராகவன் அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் திடீரென ஏதாவது ஒரு தத்துவ ட்வீட் போடுவார். அதன் பின்னர் பல நாட்கள் ஆள் காணாமல் போய் விடுவார். இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

கடைசியாக தம்பி தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கிய நானே வருவேன் திரைப்படம் பெரும் பில்டப்புக்கு மத்தியில் வெளியாகி தோல்வியை தழுவியது. அதன் பின்னர் நடிகராக வலம் வந்த செல்வராகவன் பகாசூரன், மார்க் ஆண்டனி படங்களில் நடித்த பின்னர் இந்த ஆண்டு எந்தவொரு படத்திலும் தலை காட்டவில்லை.

Selvaraghavan latest tweet gets more Covishield comments

7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம், புதுப்பேட்டை 2ம் பாகம், ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் என வரிசையாக பல படங்களை செல்வராகவனிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

புத்தி கெட்டு திரிந்தால்தான்: "ஐயோ ! இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே ! இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒரு போதும் கலங்காதீர்கள் ! புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் ! இந்த நொடிதான் பிறந்தது போல் நினைத்துக் கொள்ளுங்கள்" என இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட் தீயாக பரவி வருகிறது.

Selvaraghavan latest tweet gets more Covishield comments

எதுக்கு இப்போ?: நீங்க சொன்னா கரெக்ட்டு தலைவரே என செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்ஜிகே படத்தின் டெம்பிளேட்டை போட்ட ரசிகர்கள். எல்லாம் ஓகே. ஆனால், எதுக்கு இப்போ இந்த தத்துவம்... என்ன சொல்ல வரீங்க என கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

Selvaraghavan latest tweet gets more Covishield comments

கோவிஷீல்டு கமெண்ட்ஸ்: தெரிஞ்சிருந்தா நான் போட்டிருக்க மாட்டேன் என கோவிஷீல்டு சர்ச்சை குறித்த கமெண்ட்டுகளை போட்டு செல்வராகவனை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2, 7ஜி ரெயின்போ காலனி 2 படமெல்லாம் எப்போ தான் பண்ணுவீங்க செல்வா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர் தனுஷ் ஒரு பக்கம் குபேரா, ராயன், இளையராஜா என பல படங்களில் பிசியாக உள்ள நிலையில், இப்போதைக்கு அவர் அண்ணன் செல்வராகவனுக்கு கால்ஷீட் கொடுக்க மாட்டார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X