செல்வராகவனால் மறக்க முடியாத அளவுக்கு தனுஷ் கற்றுக் கொடுத்த 'அந்த' பாடம்
சென்னை: தம்பி கற்றுக் கொடுத்த பாடத்தை கடைபிடிப்பதாக தெரிவித்துள்ளார் செல்வராகவன்.
செல்வராகவன் சூர்யாவை வைத்து என்.ஜி.கே. படத்தை இயக்கி வருகிறார். அவர் ஏதாவது அப்டேட் கொடுக்க மாட்டாரா என்று சூர்யா ரசிகர்கள் தினம் தினம் அவரின் ட்விட்டர் பக்கத்திற்கு செல்கிறார்கள்.
அப்டேட்டை தவிர மற்றவை பற்றி எல்லாம் ட்வீட் போடுகிறார் செல்வராகவன்.

கெஞ்சல்
சார், தயவு செய்து என்.ஜி.கே. பற்றி ஏதாவது அப்டேட் கொடுங்க சார் என்று சூர்யா ரசிகர்கள் கெஞ்சி கொஞ்சிப் பார்த்தும் பலனில்லை. அப்படி இருந்தும் அவர்கள் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை பாராட்டியே ஆக வேண்டும்.
செல்வராகவன்
என் தம்பி வெகு வருடங்களுக்கு முன்பு எனக்கு கற்றுக் கொடுத்த பாடம், நான் இன்று வரை கடைபிடிப்பது "மற்றவரை ஒரு வேலை செய்ய சொல்வதை விட நாமே செய்து விடலாம் " என்று ட்வீட்டியுள்ளார் செல்வராகவன்.
சூர்யா ரசிகர்கள்
செல்வராகவன் தனது தம்பியை பற்றி போட்ட ட்வீட்டை பார்த்து கூட என்.ஜி.கே. அப்டேட் கொடுக்கப் போகிறாரோ என்று நினைக்கிறார்கள் சூர்யா ரசிகர்கள்.
பிரபு
செல்வராகவன் அப்டேட் கொடுக்க மாட்டார் என்ற முடிவுக்கு வந்த சூர்யா ரசிகர்கள் தயாரிப்பாளர் பிரபுவிடம் அப்டேட் கேட்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











