twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செல்வராகவனால் நடிப்பே வேண்டாம்.. டாக்டராவே இருந்துடலாம்னு நினைச்சேன்: சாய் பல்லவி

    செல்வராகவன் சினிமாவையும் நடிப்பையும் வேறு கோணத்தில் பார்க்கிறார் எனத் தெரிவித்துள்ளார் சாய் பல்லவி.

    By Staff
    |

    Recommended Video

    Actress Sai Pallavi: NGK திரைப்படத்தில் தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்- வீடியோ

    சென்னை: செல்வராகவன் சினிமாவையும் நடிப்பையும் வேறு கோணத்தில் பார்க்கிறார் எனத் தெரிவித்துள்ளார் நடிகை சாய் பல்லவி.

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் என்.ஜி.கே.. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சாய்பல்லவி. இம்மாத இறுதியில் இப்படம் ரிலீசாக இருக்கிறது.
    இந்நிலையில், என்.ஜி.கே பட அனுபவங்கள் குறித்து சாய் பல்லவி கூறுகையில்,

    புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன?... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்! புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன?... சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் நச் பதில்!

     தொழில் பக்தி:

    தொழில் பக்தி:

    முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே இது கோவில் மாதிரி, ஆகையால் கோவிலுக்கு செல்லும்போது எப்படி பக்தியோடு செல்வோமோ அப்படிதான் வரவேண்டும் என்று கூறிவிட்டார் செல்வராகவன். நானும் முதலில் மிக கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவருடைய சினிமா என்ற பள்ளிக்கூடத்தில் எளிமையாக கற்றுக் கொள்ளலாம் என்று 2, 3 நாட்களில் புரிந்துகொண்டேன்.

    நடிப்பு பயிற்சி:

    நடிப்பு பயிற்சி:

    பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் செல்போன் உபயோகிப்போம், மற்ற படங்களைப் பற்றி பேசுவோம். ஆனால், செல்வராகவன் படப்பிடிப்பு தளத்தில் 100 சதவீதம் அப்போது நடிக்க வேண்டிய காட்சியைப் பற்றிய வசனங்களை வைத்துக் கொண்டு ஆளுக்கொரு இடத்தில் நின்று கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டிருப்போம். ஒழுக்கம் என்றால் என்ன? என்று அங்குதான் கற்றுக் கொண்டேன்.

     கற்றுத் தருவார்:

    கற்றுத் தருவார்:

    மேலும், படப்பிடிப்பு நடப்பதற்கு முதல் நாளே அந்த காட்சிக்கு தேவையான வசங்களை முன்பே வாங்கி வீட்டில் பயிற்சி எடுத்து கொண்டு வருவோம். ஆனால், படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிறகு அவர் சொல்வதைக் கேட்டு நடித்தால் தான் சரியாக இருக்கும்.

    செல்வராகவன் கறார்:

    செல்வராகவன் கறார்:

    ஒரு வசனத்திற்கு எப்படி முகபாவனை செய்ய வேண்டும்? எப்படி அழ வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக சொல்லிக் கொடுப்பார். அதுமட்டுமில்லாமல் கோபப்பட்டு நடிக்கும் காட்சிகளில் கூட மூச்சுவிடுவது வெளியே தெரியக்கூடாது என்று கூறுவார். அவர் நினைக்கும் நடிப்பு நம்மிடம் வரும்வரை விடமாட்டார்.

    கவலை:

    கவலை:

    ஒரு நாள் காலை முதல் மாலை வரை அவர் நினைத்த மாதிரி நடிப்பு வரவில்லை, நாளை பார்க்கலாம் என்று கூறிவிட்டார். அன்று இரவு எனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் என்று என் அம்மாவிடம் கூறிவிட்டேன்.

     ஒரே டேக்:

    ஒரே டேக்:

    அன்று முழுவதும் அழுதுக் கொண்டே இருந்தேன். ஆனால் மறுநாள் ஒரே ‘டேக்'கில் அவர் நினைத்தது வந்துவிட்டது என்று கூறிவிட்டார். அதை நம்பாமல் என் அம்மா உங்களிடம் பேசினார்களா? என்று செல்வராகவனிடம் கேட்டேன். அதற்கு அவர் இல்லை நான் கேட்டது கிடைத்துவிட்டது என்று கூறினார்.

    தவறான கணிப்பு:

    தவறான கணிப்பு:

    பிறகு சூர்யா சாரிடம் கேட்டபோது, நானும் நிறைய ‘டேக்' வாங்கித்தான் நடிக்கிறேன் என்றார். அதன்பிறகு தான் சிறிது ஆறுதலாக இருந்தது. நடிப்பு என்றால் என்ன? என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேனோ அதெல்லாம் முற்றிலும் தவறாகிவிட்டது. செல்வராகவன் சினிமாவையும் நடிப்பையும் வேறு கோணத்தில் பார்க்கிறார்' என இவ்வாறு சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

    English summary
    Actress Sai Pallavi said that she was quiet depressed and thought of leaving acting field.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X