Selvaraghavan: மூணு வருஷத்துக்கு முன்னாடி தாங்கமுடியாத வலி.. பர்சனல் விஷயத்தை ஷேர் செய்த செல்வராகவன்

சென்னை: தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். சமீப காலமாக நடிகராகவும் கலக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸ் படங்களை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், பலரும் கேட்கும் ரீ ரிலீஸ் என்றால் அது இவரது படமான ஆயிரத்தில் ஒருவன் படம் தான். ஆனால் இவரோ அந்த படத்தை ரீ ரிலீஸ் செய்யும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். மேலும் அந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் மக்கள் அதைக் கொண்டாடவில்லை. அதே நேரத்தில் தெலுங்கு ரசிகர்கள் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் என்று எல்லாம் தெரிவித்திருந்தார்.

செல்வராகவன் தனது சமூக வலைதள பக்கங்களில் தனது மனதில் தோன்றும் கருத்துக்களை குறிப்பாக தத்துவங்களை பேசியும் பதிவிட்டும் வருகிறார். அப்படி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவம் ஒன்று குறித்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவானது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Selvaraghavan New Video About His Personal Matter Which Attracts Fans

எமோஷனல்: அந்த வீடியோவில், " நான் இதை ரொம்ப நாளாக உங்களிடத்தில் சொல்லலாம் என்று இருந்தேன். இப்போதுதான் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இது கொஞ்சம் சென்சிட்டிவானதாக இருக்கலாம். அல்லது ரொம்பவும் சென்சிட்டிவானதாக இருக்கலாம். இது உங்களில் பலருக்கும் நடந்திருக்கலாம். ஒரு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எனது வாழ்க்கையில் பெரும் துயரம் ஒன்று நடைபெற்றது. இந்த துயரத்தை என்னால் தாங்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் நான் அழவில்லை, ஆனால் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது.

கஷ்டம்: மனதிற்குள் இது கடவுள் கொடுத்ததுதான் என்று நான் நினைத்துக் கொண்டாலும், கடவுளே எனக்கு ஏன் இப்படி சோதனைகளைக் கொடுக்கிறாய் என்று எல்லாம் நான் கேட்டு இருக்கிறேன். ஆனால் இந்த சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டுக்குப் பின்னர் எனக்கு மற்றொரு சம்பவம் நடைபெறும் போது, இந்த துயரத்தை தாங்கும் மனவலிமையை எனக்கு ஏற்படுத்தத்தான் கடவுள் எனக்கு அப்படி ஒரு துயரத்தைக் கொடுத்து என்னைத் தயார் படுத்தி உள்ளார் என்று நான் நினைக்கிறேன். உங்களுக்கும் இது போல ஏதாவது துயரம் ஏற்படுகிறது என்றால் உங்களை வலிமையாக்கத்தான் கடவுள் இவ்வாறு செய்கிறார் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X